| பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             செர்கோஸ்போரா       இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா செனசென்ஸ்
              
                
                  அறிகுறிகள்
                    
                  
                    
                      - சிறிய       புள்ளிகள் நிறைய எண்ணிக்கையில் தோன்றி வெளிறிப்போன பழுப்பு நிறத்துடன் கூடிய       புள்ளியையும் பழுப்பு கலந்த சிவப்பு நிற விளிம்பையும் கொண்டுள்ளது. இதே போன்ற       புள்ளிகள் கிளைகளிலும் காய்களிலும் தோன்றுகிறது.
 
                      - சாதகமான       சூழ்நிலை ஏற்படும் போத நிறைய இலைப்புள்ளிகள் தோன்றி அவை பூக்கும் மற்றும் காய்க்கும்       சமயத்தில் அவ்விலைகள் உதிர்ந்துவிடுகின்றன.
 
                     
                  கட்டுப்பாடு 
                  
                    - சுத்தமான       சாகுபடி முறையை மேற்கொள்ளவேண்டும்.
 
                    - நோய்       தாக்காத விதையைப்பயன்படுத்தவேண்டும்.
 
                    - குறைந்த       அளவு செடிகளின் எண்ணிக்கையை வைத்திருத்தல் வேண்டும். செடிகளுக்கு இடையே அகலமான       இடைவெளி விடுதல்வேண்டும்.
 
                    - நிலத்தில்       போர்வை போன்ற கழிவுகளைக் கொண்டு போர்த்தினால் நோயின் தாக்கம் குறைந்து மகசூல்       அதிகரிக்கும்.
 
                    - விதைத்த       30 நாட்களுக்கு பின்பு கார்பன்டாசிம் 0.5 கிராம் / லிட்டர் அல்லது மேங்கோசெப்       2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
   | 
                   | 
                 
               
             
             | 
           
         
  |