| பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            பாக்டீரியா       இலைக்கருகல்: சேந்தோமோனஸ் ஃபேசியோலி
              
                
                  அறிகுறிகள்
                    
                  
                    
                      -  இந்நோயினால்  பாதிக்கப்பட்ட  செடியின் இலைப்பழுப்பு நிறமாகவும்,  காய்ந்தும், சிறிது உயர்ந்த புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
 
                      -  இந்நோய்  தீவிரமடையும் போது இவ்வாறான புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய கருகல் போன்ற தோற்றமும்  மற்றும் இலைகள் மஞ்சள் நிறமாகவும் மாறியும், சில நாட்களில் முதிர்ச்சி அடையும் முன்  உதிர்ந்துவிடும் தன்மையுடையது.
 
                      -  இலையின்  கீழ்ப்பாகம் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு காரணம் சத்து உயர்ந்துள்ள புள்ளிகள்.
 
                      -  இந்த  வகை பாக்டீரியம் விதையிலிருந்து உற்பத்தியாகிறது.
 
                      -  இந்நோயினால்  தண்டும், காயும் பாதிக்கப்படுகின்றன.
 
                     
                  கட்டுப்பாடு 
                  
                    - முந்திய       பயிரின் கழிவுகளை அழிக்கவேண்டும்.
 
                    - விதைகளை       விதைப்பதற்கு முன் 500 பிபிஎம் ஸ்ரெப்டோசைக்கிளின் திரவத்தில் 80 நிமிடங்கள்       ஊறவைத்து பின்பு ஸ்ட்ரெப்டோசைக்ளின்னுடன் கார்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் /       லிட்டர் கலந்து இரண்டு முறை 12 நாள் இடைவெளியில் தெளிக்கலாம்.
 
                    | 
                   | 
                 
                | 
           
         
  |