மாவுப்பூச்சி: பெர்ரிசியா  விர்கேட்டா 
அறிகுறிகள்: 
              
                
                  - பழங்கள்  முதிர்வதற்கு முன்பே உதிர்ந்து விடும்.
 
                 
               
              பூச்சியின் விபரம் 
              
                
                  - இளம்  பூச்சி – மஞ்சள் நிறத்திலிருந்து இளம் வெள்ளை நிறமாக மாறும்.
 
                  - பூச்சி – நீளமாக, தட்டையாக, மெழுகு போன்ற சுரப்பு சூழ்ந்திருக்கும்.
 
                 
 
               கட்டுப்பாடு : 
              
                
                  - கொடிகள்  மற்றும் கிளைகளை பட்டை உரித்து, மீத்தைல் பாராத்தியான் பசையை அளிக்க வேண்டும்.
 
                  - சேதமடைந்த  பட்டைகள், இலைகள், கொம்புகள், தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
 
                  - 5  செ.மீ நீளத்தில் பழங்களை தாங்கியுள்ள கிளைகளின் மீத ஒட்டுப் பொறியை பயன்படுத்த வேண்டும்.
 
                  - டைகுளோர்வாஸ்  76 wsc  0.15%  ஐ மீன் எண்ணெய் ரோசின் சோப் (25 கிராம்) கலந்து பயன்படுத்த வேண்டும்.
 
                  - டைமெத்தோயேட்  30 கிகி + மண்ணெண்ணய் 150 மிலியை 100 மிலி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
 
                  - குயனைல்பாஸ்   25 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தூவ வேண்டும்.
 
                  - இரைவிழுங்கியான  கிரிப்டோலேமியஸ் மான்ட்டோஜெர்ரி 10 வண்டு/கொடி என்ற அளவில் விடவும்.
 
                  - ஒட்டுண்ணிகளாக  அனாக்ரஸ் டேக்டோலோப்பி, க்ணானுஸோய்டியா மிர்ஜயை  வயலில் விடவும்.
 
                 
  | 
              
             
  |