பயிர் பாதுகாப்பு :: கிளாடியோலஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தேன் உறிஞ்சும் இலைப்பேன்: த்ரிப்ஸ் ஃப்ளவஸ்

சேதத்தின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட பூக்கள் சுருக்கங்களுடன் கருமையாக இருக்கும்.
பூச்சியின் விபரம்
  • இளம் குஞ்சுகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  • இலைப்பேன் : மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கால்கள் மற்றும் இறக்கைகள் மஞ்சள் முதல் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
  • 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மீதைல் டிமெட்டான் அல்லது டைமீதோயேட் கலந்து தெளிக்கவும்.
  • மொட்டு விடுவதற்கும் முன்பு 1 லிட்டர் தண்ணீரில் 1.25 மிலி மாலத்தியான் (அ) கார்பரில் 2 கிராம் கலந்து தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015