பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைத் துளைக்கும் புழு: லிரியோமைசா டிரைபோலி, லி, சான்கோ

அறிகுறிகள்:

  • இலையைத் துளைத்து, ஒழுங்கற்ற வடிவ சுரங்கப்பாதை அமைத்து, உள்ளே உள்ள திசுக்களை உண்ணுகின்றன.
  • தாக்கப்பட்ட இலைகள், இளம் மஞ்சள் நிறமாகத் தோன்றி, பின் பழுப்பு நிறமாக மாறுகின்றன.

கட்டுப்பாடு:

  • யூலோபிட் பூச்சியான ஒட்டுண்ணி, டைகிலிபஸ் இசேயே தோட்டத்தில் வெளிவிடுதல்.
  • மஞ்சள் ஒட்டுப் பொறி பயன்படுத்துதல்.
  • டைமெத்தோயேட் 30கிகி (அ) டைகுளோர்வாஸ் 76கிகி 1மிலி/லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளித்தல்.
  • குளோர்பைரிபாஸ் 20கிகி 2மிலி/லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்
  • வேப்பங்கொட்டை சாறு 5% தெளித்தல்
முட்டை  
புழு
கூட்டுப்புழு
  பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016