பயிர் பாதுகாப்பு :: முருங்கைக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மரப்பட்டை துளைப்பான் : இன்டார்பெலா டெட்ராயோனிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • மரச்சக்கைகளும், புழுவின் சிறுசிறு-உருண்டையா கழிவுப்பொருட்களும் கொண்ட வல்லிய நூலாம்படை மரப்பட்டையின் மீது வளைந்தும் நீளமாகவும் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • புழு: நீளமாகவும், அழுக்கான பழுப்பு நிறத்துடனும், கருமையான தலையுடன் இருக்கும்.
  • பூச்சி: வெளிர் பழுப்பு நிறத்துடன் இருக்கும். முன்இறக்கைகள் பழுப்பு நிறப்புள்ளிகளையும், வளர்ந்த கோடுகளையும் கொண்டிருக்கும். பின்இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பட்டையிலுள்ள பூலாம்பட்டையை சுத்தம் செய்து விட்டு ஃபார்மலின் அல்லது குளோர்ஃபார்ம் அல்லது பெட்ரோல் நனைத்த பஞ்சை கொண்டு பட்டையில் உள்ள துளையை அடைக்கவும் அல்லது சேறு கொண்டு அடைக்கவும்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016