பயிர் பாதுகாப்பு :: முருங்கைக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மொக்குப்புழு : னூர்டா மொரிங்கே

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பூ மொக்ககளை புழுக்கள் துளையிட்டு சாப்பிடும், தாக்கப்பட்ட பூ மற்றும் மொக்குகள் உதிர்ந்து விடுகின்றன

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வெண்ணிற நீள்வட்ட முட்டைகளை மொக்குகளில் தனியே இடும்.
  • புழு: புழுக்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும். தலை மற்றும் முன்மார்பு உறை கருப்பு நிறத்தில் இருக்கும்
  • கூட்டுப்புழு: மண் பட்டுக்கூட்டில் கூட்டுப்புழு பருவம் மேற்கொள்ளும்
  • பூச்சி:
    • முன்இறக்கைகள் : பழுப்பு நிறத்தில் இருக்கும்.
    • பின்இறக்கைகள் : வெண்ணிறத்திலும் அதன் ஓரங்களில் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

கட்டுப்படுத்தம் முறை:

  • உதிர்ந்த பூ மற்றும் மொக்குகளைப் பொறுக்கி அழித்தல்
  • ஹெக்டேருக்கு 1 லிட்டர் மாலத்தியான் தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015