பயிர் பாதுகாப்பு :: சீத்தாப்பழம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பழ ஈ: பெக்ட்ரோசெரா ஸோனெடா
சேதத்தின் அறிகுறி:
  • ஈயின் புழுவானது பாதி பழுத்த பழத்தினுள் துளையிடும்
  • உள்ளே சென்று சதைப்பகுதியை உட்கொள்ளும்
  • பாதிக்கப்பட்ட பழங்கள் உருமாறி, சுருங்கி , அழுகிய நிலையில் பின்பு கீழே விழுந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • புழு: மஞ்சள் நிறத்தில் காணப்படும், கால்கள் கிடையாது
  • பூச்சி: இளம் பழுப்பு நிறத்தில் காணப்படும் மற்றும் கண்ணாடி நிற இறக்கைகள் கொண்டது.
maggots custpest

கட்டுப்படுத்தும் முறை:

  • பாதிக்கப்பட்ட பழங்களை ஒருங்கிணைத்து ஒரு குழியிணுள் போட்டு மண்ணிணால் மூடிவிடவேண்டும்
  • கோடை உழவு செய்து கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும்
  • பாதிக்கப்பட்ட பழங்களை சுடு தண்ணீரில் (45 to 47 °C) 1 மணி நேரம் மூழ்க வைப்பதன் மூலம் முட்டைகளையும், இளம் புழுக்களையும் அழிக்கலாம்
  • மெத்தில் யூஜினால்  கவரும் பொறியை கொண்டு ஈக்ககளின் பாலியல் செயல்பாட்டை  கண்காணிக்க வேண்டும்
  • பின்வரும் பூச்சிக் கொல்லி மருந்தில் ஏதேனும் ஒன்றை லிட்டருக்கு 10 கிராம் மொலாசஸ் (அ) வெள்ளம் கலந்து தெளிக்கவும்.
    • மாலதியான் 50 EC  2 மிலி/லி
    • டைமீதோயேட் 30 EC 1 மிலி/லி
    • கார்பரில் 50 WP  4 கி/லி
  • இதனை பழங்கள் பழுப்பதற்கு முன்னால் 2 வாரம் இடைவெளியில் தெளிக்கவும்.
  • மாலத்தியான் 0.1%  மற்றும்  மெத்தில் யூஜினால் 1% கலந்த இரை கண்ணி கொண்டு கட்டுபடுத்தலாம்
  • பொறி ஒன்றுக்கு இந்த கலவையை 10 மில்லி எடுத்து ஒரு ஹெக்டேருக்கு 25 வெவ்வேறு இடங்களில்  பொறி  வைக்க வேண்டும்
  • உள்ள மாலத்தியான் 50 ஈசி 0.1% 1 மிலி/ லிட்டர் தெளிக்கவும்
  • ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015