பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இளஞ்சிகப்பு தண்டுதுளைப்பான்: செசமியா இன்பெரென்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது.
  • தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும்

 பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டையானது அடுக்கடுக்கான வடிவில் இலை உறைகளில் காணப்படும்
  • புழு: சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் தலை கருமை நிறமாகவும் இருக்கும்
  • பூச்சி: பெண் அந்துப்பூச்சி முட்டையை இலையின் அடிப் பகுதியில் இடுகிறது

கட்டுப்படுத்தும் முறை:

  • எக்டருக்கு பாசலோன் 35 % இ.சி  மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016