பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டு துளைப்பான்: கைலோ பார்டெலஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • நடுக்குருத்து காய்ந்து பின்னர் உதிர்ந்துவிடும்
  • இலைகணுக்களில் துளையிட்டு செல்வதால் சிவப்பாக காணப்படும்
  • தண்டின் கணுப்பகுதியில் துவாரங்கள் காணப்படும்
  • வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளில் இணையாக துவாரங்கள் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் தட்டையாகவும், இலைக்கு அடியில் கும்பலாகவும் முட்டையிடும்
  • புழு: புழுக்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும், தலைப்பகுதி பழுப்பு நிறமாகவும் காணப்படும்
  • பூச்சி: அந்துப்பூச்சி வைக்கோல் நிறமாக காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • அறுவடை செய்த உடனே மக்காச்சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
  • கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை மணலுடன் (50 கிலோ) கலந்து வீசவும்
    • போரேட் 10 G 8 கிலோ
    • கார்போபியூரான் 3 G 17 கிலோ
    • கார்பரில் 50 WP 1 கிலோ
புழு
அந்துப்பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016