தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - தண்டுகள் மற்றும் இலைகள்- கருகல் மற்றும் வாடல் 
 
                - பழம்: சிதைவுகள் தண்டை சுற்றி தோன்றுகிறது 
 
                - பழ தோள்களில் வெளிறிய பழுப்பு நிறம் கொண்ட நீர் நனைத்த பகுதி உருவாகும் 
 
                - புள்ளிகளின் மைய பகுதி கரும் நிறமாக மாறி,  விரிசல் ஏற்பட்டு சுருங்கி விடும் 
 
               
              நோய் காரணி: 
              
                - பிக்னிடியா- கருப்பு நிறமாக பெரிதாக இருக்கும் 
 
                - இளம்பருவத்தில்- நிறமற்ற, தடித்த சுவர் மற்றும் ஒரு அணுவை கொண்டு இருக்கும் 
 
                - முதிர்வடையும்போது- அடர் பழுப்பு , கடினமான சுவர் மற்றும் இரண்டு அணுவை கொண்டு இருக்கும் 
 
                - உயிர் பிழைப்பதற்கான முறை-  கொண்டியா 
 
                - பரவல் முறை- காற்று, பண்ணை கருவிகள் மற்றும் பூச்சிகள்              
 
               
              மேலாண்மை: 
              
                - கீறல்கள் மற்றும் காயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் 
 
                - அறுவடைக்கு பின் குளிர் நிலையில் பழங்களை வைக்கவும் 
 
                - நீண்ட தண்டுகளுடன்  பழங்களை அறுவடை செய்யவும் 
 
                - வெட்டப்பட்ட பகுதியை காப்பர் சல்பேட் கொண்டு  தடவவும் 
 
                | 
            
              
                  | 
               
              
                | தர்பூசணி டிப்லோடியா பழம் அழுகல் நோய | 
               
              |