புடலை  காவடிப்புழு: ப்ளுசியா பெப்போனிஸ் 
                சேதத்தின்  அறிகுறிகள்:  
              
                - இலைகள் கடித்து தின்னப்பட்டிருக்கும்
 
                - இலைகளை சுருட்டி அதனுள் இருந்து சாப்பிட்டுக்  கொண்டிருக்கும்.
 
               
              பூச்சியின் விபரம்: 
                
                - முட்டை : வெள்ளைநிற உருண்டை வடிவ முட்டையை தனித்தனியாக இளம் இலைகளில் இடும்.
 
                - புழு : உடல் வெண்மை கலந்து பச்சை நிறத்துடன் வெண்ணிறக் கோடுகளுடன் காணப்படும். உடலின் பின்பகுதி  உயர்ந்துக் காணப்படும்.
 
                - கூட்டுப்புழு : சுருட்டிய இலையில் மெல்லிய áலாம்படைக்குள் கூட்டுப்புழு இருக்கும்.
 
                - பூச்சி : அந்துப்பூச்சி பழுப்பாக பளப்பளப்பாக மின்னும் முன் இறக்கையுடையது.              
  
              கட்டுப்படுத்தும்  முறைகள்:  
              
                - புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
 
                - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை  தெளிக்கவும் : 
                  
                    - மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
 
                    - டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
 
                    - மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்
 
                   
                 
                |