| பயிர் பாதுகாப்பு  :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
             பச்சைப்புழு : ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா 
                  சேதத்தின் அறிகுறிகள்
                
              
                  - பூக்களை தின்று சேதப்படுத்தும்.
 
                  - இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும் 
 
                  - முதிர்ந்தபுழுக்கள் பூவிதழ்களிகளை உன்னும் 
 
                  - இப்புழுக்கள் பூவிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின்பாதி பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும். 
 
                   
                 
               
              பூச்சியின் விபரம் 
              
                - முட்டை :                 பெண் அந்துபபூச்சி சொரசொரப்பான  வெள்ளைநிற முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது. 
 
                - புழு :                பச்சை மற்றும் பழுப்பு நிற  வேறுபாடுகளை தோற்றுவிக்கும். 
                  வளர்த்த புழுக்கள் பச்சை  நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பல் நிறக் கோடுகளுடன் காணப்படும்.
 
                - கூட்டுப்புழு :   கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில், மண், இலை மற்றும்  பண்ணைக் கழிவுகளில் காணப்படும். 
 
                - பூச்சி :  பெண் அந்துப்பூச்சி வெளிர்  பழுப்பு நிறமாக இருக்கும்.                ஆண் அந்துப்âச்சி வெளிர்  பச்சை நிறத்தில் V - வடிவக் கோடுகள் இருக்கும். 
 
                - முன் இறக்கை  :  பழுப்பு நிற முன் இறக்கையில்  V - வடிவக் கோடு இருக்கும்.
 
                - பின் இறக்கை :   ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு  நிறத்தில் இருக்கும். 
 
               
                                கட்டுப்படுத்தும் முறைகள்
              
              
              
                
                  - தாக்கப்பட்ட பூ மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து       அழிக்கவும். 
 
                  - இனக்கவர்ச்சிப் பொறி ஹெலிæர் ஹெக்டேர்க்கு @15 வீதம்       வைக்கவும். 
 
                  - முட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு       @ 50,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விடவேண்டும். 
 
                  - கிரைசோப்பெர்லா கார்னியா எனும் இரை விழுங்கிப் âச்சிகளை நட்ட 30 - ம் - நாள் முதல் வாரம் ஒரு முறை @ 50,000 முட்டைகள் அல்லது புழுக்களை விட வேண்டும். 
 
                  - ஹெலிகோவெர்பா நிäக்ளியர்       பாலி ஹெட்ரோசிஸ் வைரஸ் [எச்.எ.என்.பி.வி ] திரவத்தினை ஹெக்டேருக்கு @500 புழு சமன் அளவுடன் பருத்தி விதை எண்ணெய் 300 கிராம்       அளவில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கவும். 
 
                  - கார்பரில்       2 கிராம்/லிட்டர் அல்லது பெசில்லஸ் துருஞ்ஐியென்சிஸ் @ 2 கிராம்/லிட்டர் அளவில் தெளிக்கவும். 
 
                 
 
             | 
              
                
                
               
               
               
               
               | 
           
         
         
 |