இந்தியாவில் தாவர தொற்றொதுக்கத்தின் வசதிகளை  வலிமைப்படுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் 
                 
              தாவர தொற்றுநோய்  ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் 'அழிவு ஏற்படுத்தும்  பூச்சிகள் & தாவரங்களை பாதிக்கும் பூச்சிகளுக்கான  தடைச் சட்டம், 1914 (சட்டம் 1914-ன் 2)  மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் நோக்கம், பயிர்களுக்கு அழிவை  ஏற்படுத்தும் பூச்சிகள், பூஞ்சாண்கள் தாவரங்களை பாதிக்கும் பூச்சிகள் போன்றவற்றின்  அறிமுகத்தை தடுப்பதாகும். தற்போது, விவசாயப் பொருட்களின் இறக்குமதி தாவர தொற்றொதுக்க  ஆணை, 2003 என்ற புதிய கொள்கை விதை வளர்ச்சி திட்டம் 1988-ன் கீழ் செயல்படுகிறது. மேலும், உலக வணிக அமைப்பின் (WTO) கீழ் தூய்மை மற்றும் பயிர்த்தூய்மை  ஒப்பந்ததிற்கு அடுத்து தாவரங்கள் மற்றும் தாவர பொருட்களின் சர்வதேச ஒப்பந்தத்தில்,  உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல், தாவர தொற்றொதுக்கத்தின் முக்கியத்துவம்  பெற்றுள்ளது. சர்வதேச பயிர் பாதுகாப்பு மாநாடு (IPPC), 1951-ன் படி விவசாய பொருட்களுக்கான  தாவர நலச்சான்று ஏற்றுமதிக்கும்  செய்யப்படும்.  
              நோக்கங்கள்:  
              
              
                 - DIP சட்டம்,1914 மற்றும்  தாவர தொற்றொதுக்க ஆணை,       2003-ன் கீழ் இறக்குமதி       செய்யப்படும் விவசாய பொருட்களை அயல் நாட்டு பூச்சி இனங்கள் மற்றும் நோய்கள்,       இந்திய விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களுக்கு முரணாக அறிமுகமாதலை பரிசோதனைகள்       மூலம் தடுத்தல். 
 
                -  பூச்சிகளற்ற வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் சர்வதேச       பயிர் பாதுகாப்பு மாநாடு (IPPC) 1951, FAO கீழ் ஏற்றுமதி செயப்படும் தாவரங்கள் மற்றும் தாவர       பொருட்களை பரிசோதனை செய்தல் 
 
                - ஏற்கனவே அறிமுகமான அயல்நாட்டு பூச்சிகள் மற்றும் நோய்களை உள்நாட்டு தொற்றொதுக்க கட்டுப்பாடுகள் கொண்டு       கட்டுப்படுத்துதல் 
 
                
               
              இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தற்போதைய நடவடிக்கைகள்  பின்வருமாறு:  
              
              
                 - விவசாய பொருட்களை  எளிதாக இறக்குமதி       செய்ய கூடுதல் அறிவிப்புக்கள் மற்றும் சிறப்பு நிபந்தனைகளின் அடிப்படையில்       அனுமதி வழங்குதல். 
 
                - தாவரங்கள் மற்றும் தாவரங்கள் சார்ந்த பொருட்களை       தொற்றொதுக்க ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட சோதனைகளை மேற்கொள்ளுதல். 
 
                - 150 இல மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசு       அதிகாரிகளுக்கு தாவர நலச்சான்று வழங்குதற்கான  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 
                - தொற்று கட்டுப்படுத்த வாயு / disinfestations       / பொருட்களின்       disinfections போன்றவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட       பொருட்களிலிருந்து நோய் தொற்றுதலை கட்டுபடுத்தல். 
 
                - தாவரங்கள் மற்றும் தாவரங்கள் சார்ந்த பொருட்களுக்கான       பிந்தைய நுழைவுக்கான சான்றிதழ் 41 இல. அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன 
 
                - தாவர நலச்சன்று வழங்குதலின் அடிப்படையில் ஏற்றுமதி       சந்தையில் இந்திய விவசாய பொருட்களுக்கு ஆதரவளித்தல் 
 
                - வர்த்தக கூட்டணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு       தொழில்நுட்ப தகுதி மற்றும் நம்பகமான தாவர நலச் சான்றிதழ் வழங்குவதன் மூலம், தயாரிப்பாளர்கள் மற்றும்       ஏற்றுமதியாளர்கள் உதவுவதன் மூலம் விவசாயத்தில் பாதுகாப்பான உலகளாவிய வர்த்தக வசதிகளை ஏற்படுத்தல் 
 
                - சிறு       சிறு உபகரணங்களுக்கான ஏற்றுமதி பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறுதல்       போன்றவற்றிற்கான அதிக செலவுகளை உதவி மானியம் கொண்டு வழங்குதல் 
 
                - ISPM-15-ன் கீழ் பரிசோதனைக்கு தேவையான வழங்குநர்களின் ஒப்புதல் / அங்கீகாரம்       வழங்குதல். 
 
                - சம்பந்தப்பட்ட நாடுகளின் சார்பில் வெவ்வேறு விவசாய       பொருட்களுக்கான இறக்குமதி அல்லது ஏற்றுமதியை பி.ஆர்.ஏ-க்கள் கொண்டு       மேற்கொள்ளுதல். 
 
                
              |