ஆந்தராக்னோஸ்: க்ளியோஸ்போரியம் பப்பாயே 
             
              அறிகுறிகள்: 
                - புள்ளிகள்       பழங்களின் தோலின் மேற்பரப்பில் பழுப்பு நிறத்தில் நிறம் மாற்றம் ஏற்படும். இது       வட்ட வடிவத்தில் 1-3 செ.மீ விட்டம் அளவு பழத்தின் பகுதிகள் குழியாகக் காணப்படும்
 
                - படிப்படியாக       புள்ளிகளின் விளிம்புகளில் நைவுப்புண் ஒன்றாகி அடர்த்தியற்ற பூசண இழையின் வளர்ச்சியை       உண்டாக்கும்
 
                - ஈரமான       நிலையில் கெட்டியான அரக்கு இளஞ்சிவப்பு பூசணவித்தை வெளிப்படுத்தும்
 
                - ஆரம்ப       நிலையில் பழங்கள் தாக்கப்பட்டால் காய்ந்து, உருச்சிதைத்து காணப்படும்
 
               
  
      | 
      | 
      | 
      | 
   
  
    | தோலின் மேற்பரப்பில் புள்ளிகள் | 
    பழுப்பு நிற குழி | 
    ஆந்தராக்னோஸ் | 
    பூசணம்  | 
   
 
நோய்  பரவுதல் மற்றும் நிலைத்திருத்தல் முறை: 
                - முதல்       நிலையா வயலிலேயே பழங்களின் மேல் நோய் தாக்குதல் ஏற்படும்
 
                - காற்று       வழியாக இந்நோய் பரவும் 
 
                - மழை       தூறல் அடிப்பதாலும் பூசண நோய் பரவும்
 
                - அதிகப்படியான       ஈரப்பதம் இருப்பதால் இலைத்தொகுதிகளில் கடுமையாக இருக்கும்
 
                - நைவுப்புண்       மிக மெதுவாக முதிராத பழங்களின் மீது உருவாகி பின் படிப்படியாக முதிர்ந்த பழங்களின்       மேல் உருவாகும்
 
               
              கட்டுப்பாடு: 
                - 0.1%கார்பன்டாசிம்-ஐ       45 நாட்கள் இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும் அல்லது
 
                - 0.2%       க்ளோரோதலோனில்-ஐ 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும் அல்லது
 
                - 0.1%       தியோஃபனேட் - மெத்தில் அல்லது 0.2% மேன்கோசெப்பை 10 நாட்கள் இடைவெளியில் தெளித்தால்       நோயைக் கட்டுப்படுத்தலாம்
 
                - பென்சிலிசோதையோசையனேட்       பயன்படுத்தி பூகையூட்டம் ஏற்படுத்தினால் அறுவடை பின்சார் புள்ளிகளையும், அழுகல்களையும்       கட்டுப்படுத்தலாம்
 
               
Image source: http://www.padil.gov.au/pests-and-diseases/pest/main/136592#  |