ஆன்த்தராக்நோஸ்: கொலட்டோட்ரைக்கம் க்ளியோஸ்போராய்ட்ஸ் 
              அறிகுறிகள்: 
                - இலைத் தண்டுகள், பூக்கள் மற்றும் பழங்களில்  நோய் தாக்கப்பட்டிருக்கும்
 
                - பழுக்கின்ற பழங்களில் மேற்பரப்பில் கரும்  புள்ளியுடன் சுருங்கிக் காணப்படும்
 
                - பாதிக்கப்பட்ட பழங்கள், கனியாகும் போது  தெளிவாக நோய் பாதிப்படைந்ததை காணலாம்
 
                - குளிர் காலங்களில் நோயின் பாதிப்பு  மிக அதிகமாகும்
 
               
  
      | 
      | 
      | 
   
  
    | பழங்களின் மேற்பரப்பில் கரும் புள்ளி்கள் | 
    மிக அதிக பாதிப்பு | 
    பாதிக்கப்பட்ட பழங்கள் | 
   
 
பரவுதல்: 
                - காய்ந்த இலைகள்,உதிர்ந்த கிளைகளிலும்  காய்ந்த பூக்களிலும் மற்றும் பூக்களின் மடல்களிலும் நுண்ணுயிரிகளை காணலாம்
 
                - இந்நோய் கொனிடியா மூலம் காற்றில் பரவுகின்றன
 
                - பச்சை பழங்களில் உள்ள தோல் பகுதியில்  பூஞ்சாண்கள் நுலைந்துவிடும்
 
                - பச்சை பழங்களில் பூஞ்சாண்கள் தோன்றும்  பின்பு இவை பழம் பழுக்கும் போது வளர்ந்து தசை பகுதியினை பாதித்துவிடும்
 
                - இலை பூசண வித்துக்களிலிருந்து முதிர்ந்த  பழங்களை இவை மறைமுகமாக பாதிக்கக்கூடும்
 
                - நோய்கள் மறைமுகமாக பழங்கள் வயல் வெளியிலிருந்து  கிடங்குகளுக்கு செல்லும் வரை நோய் பாதித்துவிடும்
 
               
              கட்டுப்பாடு: 
                அறுவடைக்கு  முன்பு: 
                - மேன்கோசெப் (800கி ஒரு கிலோவிற்கு)என்ற அளவில் பூக்கள் பூக்கும் போது வாரத்திற்கு மற்றும் அறுவடை வரைக்கும் தெளிக்க  வேண்டும். அறுவடைக்கு 14 நாட்களுக்கு முன்பே தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். வறண்ட  காலங்களில் பூக்களுக்கு தெளிப்பதைக் குறைத்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என்ற இடைவேளையிட்டு  தெளிக்க வேண்டும்
 
                - மழைக் காலங்களில் பூக்கள் பூக்கும் போது  ப்ரோலோரஸ் (ஒரு கிலோவிற்கு 462 கிராம்) அளவில் மேன்கோசெப்பை தெளிக்கவும்.
 
                - நுண்ணுயிரி கரும் புள்ளி ஆன்ந்த்தராக்னோஸ்  போன்ற நோயிலிருந்துக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிக்ளோரைட் (ஒரு லிட்டருக்கு 4 கிராம்)  என்ற அளவில் தெளிக்கவும். பூக்கள் பூக்கும் காலங்களில் காப்பர் ஆக்ஸிக்ளோரைட் உபயோகிக்கக்  கூடாது. நுண்ணுயிரி கரும் புள்ளி நோயின் அதிகரிப்பினால் பூக்கள் பூத்தப் பின்பு காப்பர்  ஆக்ஸிக்ளோரைட் பதிலாக மேன்கோசெப் தெளிக்க வேண்டும்
 
               
              அறுவடைக்கு பின்பு: 
                - மாம்பழ அறுவடைக்கு பின்பு நோய் கட்டுப்படுத்த  ‘ஹட் கார்பென்டாசிம்’, அவன்டிஸ் நிறுவனம் உற்பத்தி செய்தனர். இவை க்யூவின்லாண்ட், வடக்கு  பிரதேசம், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு வேல்ஸ் ஆகிய நாடுகளில் ஸ்பின் ஃப்லோவில்  பதிவு செய்துள்ளனர். ஸ்பின் ஃப்லோ என்பது கார்பென்டாசிம் கலவையின் நீர்ம கரைசல் ஆகும்.
 
                - அறுவடை செய்த பழங்களை 24 மணி நேரத்திற்கும்,  520 செ வெப்ப நிலையிலுள்ள நீரில் 5 நிமிடம் ஊற வைத்து அதன் பின்பு கார்பென்டாசிம்  100 மில்லி லிட்டர் கரைசலை 100 லிட்டர் நீரில் கரைத்து ஊற விடவும். வெப்ப நிலையினை  520 செல்சியஸிற்கு குறைந்தால் நோய் கட்டுபு்பாட்டினை குறைக்க இயலாது
 
                - பழங்கள் சேதம் ஆகாதாவாறு வெப்ப நிலை  0.50 என்றஅளவில் கவனமாக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நீரில் ஊற வைக்கும்  பொழுது, வெப்ப மானி உபயோகிக்க வேண்டும். மாமரம் வளர்ப்பவர்கள் பல விதத் தொட்டிகளை  உபயோகிக்கின்றனர். தொட்டிகளில் 1 கிலோ பழங்களைக் கொண்டு ஊற வைக்கலாம். இதன் மூலம்  தண்டு அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
 
               
              ஊற வைப்பதற்கான குறிப்புகள்: 
                - பழங்களை கரைசலில் நன்கு கலக்க வேண்டும்,  இவ்வாறு செய்வதன் மூலம் பூஞ்சாண்கள் பழங்களிலிருந்து மேற்பரப்பில் தனித்திருக்கும்.  நன்கு அடித்து கலக்குவதால் வெப்ப நிலை அதிகரிக்கும்
 
                - 55 மி.லி ப்ரோக்லோராஸ், 100 லி தண்ணீரில்  கலந்து பயன்படுத்தவும். பழங்களின் மேல், இந்த கரைசலினை ஒரு முறை தெளிக்க வேண்டும்.முழுமையாக கரைசலை பழங்களில் தெளிப்பதனால், நோயைக் கட்டுப்படுத்தலாம்
 
                - ப்ரோக்லோராஸ்வுடன் கலவை  மூலம் பழ ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். இக்கரைசலை ஒரு நிமிடத்திற்கு பழத்தின் மேல் தெளித்து  ஈரமாக வைக்க வேண்டும்.
 
                - அறுவடைக்கு பின்பு நோய் கட்டுப்படுத்த  கரைசல் உபயோகிப்பதனால் நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது.
 
               
Image Source: S.C.Nelson. 2008. Mango anthracnose (colletotrichum gloeosporioides). Plant Disease. 1, pp: 1-9.   |