பயிர் பாதுகாப்பு கருவிகள் : : பயிர்க்காப்பு சாதனங்களின் வகைகள் மற்றும் தெளிக்கும் உத்திகள்

தெளிப்பு சாதனங்களின் வகை மற்றும் தெளிப்பு தொழிநுட்பம்

 • பூச்சிக்கொல்லிகள் பல்வேறு வடிவில் கிடைக்கின்றன
 • தெளிப்பு சாதனங்கள் பூச்சிக்கொல்லிகளின் வகைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது
 • பயன்படுத்தப்படும்ஆற்றல் மற்றும் கொள்ளளவிற்கு ஏற்ப அளவில் சிறியது முதல் பெரியது வரை உள்ளது
 • தெளிப்பு இயந்திரங்கள் இயந்திரம் மூலமாகவோ அல்லது மனித ஆற்றலைக் கொண்டோ இயங்குகிறது
 • மேலும் இது நகர்த்தக்கூடியஅல்ல எடுத்துச் செல்லக்கூடிய வகை என இரு வகைப்படுகிறது
 • நகர்த்தக்கூடியது என்பது சக்கரத்தின் மூலம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்களால் தூக்கிச் செல்லப்படுவது.
 • எடுத்துச் செல்லக் கூடியது என்பது ஒரு மனிதனால் எளிதில் எடுத்துச் செல்லக் கூடியது ஆகும்.
சாதனத்தை தேர்வு செய்யும் முறை
பூச்சிக்கொல்லி தெளிக்கும் இயந்திரத்தை வாங்குவதென்பது நீண்டகால முதலீடு ஆகும்.  இதனை வாங்கும்பொழுது கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 • தெளிப்பிற்கு தகுந்த சாதனமாக இருத்தல்
 • எளிதில் பயன்படுத்ததக்க மற்றும் பராமரிக்க கூடியதாக இடுத்தல்
 • சிறந்த செயல்திறன் கொண்டிருத்தல்
 • சிறந்த சேவை வசதி
 • உதிரிபாகங்கள் எளிதில் கிடைக்க வேண்டும்
 • நியாயமான விலையில் கிடைத்தல்
உபகரணத்தை தேர்வு செய்யும் முறை
விவசாயிகள் தெளிப்பான்கள் மற்றும் தூசுதெளிப்பான்களை தேர்வு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
 • மூலப் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தல்
 • பற்ற வைக்கப்பட்ட இணைப்புகளையும், அசையும் பகுதியையும் அதன் மென்மையையும் தெளிப்பையும் சோதித்து பார்த்தல்
 • அகற்றி பின் சேர்க்கக் கூடிய பகுதிகளை ஆய்வு செய்தல்
 • தெளிப்பு முனை உகந்ததா என்றும், அதன் வெளியிடும் திறன் மற்றும் கோணத்தை ஆய்வு செய்தல்
 • தெளிப்பானை வாங்குவதற்கு முன்னர் அதனை இயக்கி முழுவதும் சந்தேகத்தை தீர்த்தல்
உபயோகிக்கும் முறை
ஒரு எக்டேருக்கு தேவையான திரவத்தைப் பொறுத்து உபயோகப்படுத்தும் முறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அதிக தொகுப்பு / அளவு        
 • ஒரு எக்டருக்கு 150 லிட்டருக்கு மேல் திரவம் தேவைப்படுவது
 • பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கெல்லிகளுக்கு ஏற்றது.
 • முதுகில் சுமக்கும் தெளிப்பான் மற்றும் டிராக்பில் இணைப்பு பெற்ற தெளிப்பான்களைக் கொண்டு பயன்படுத்தலாம்
குறைந்த தொகுப்பு அளவு
 • ஒரு எக்டேருக்கு தோராயமாக 10-150 லிட்டர் வரை திரவம் தேவைப்படுவது
 • பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கொல்லிக்கு ஏற்றது
 • விசைத்தெளிப்பான், வானூர்தி (அயல் நாடுகளில்) மற்றும் குறைந்த சுழற்சி சுழலும் வட்டுக்களுடைய தெளிப்பான்களையும் பயன்படுத்தலாம்
தீவிர குறைந்த தொகுப்பு அளவு
 • ஒரு எக்டேருக்கு தோராயமாக 1 முதல் 5 லிட்டர் வரை திரவம் தேவைப்படுவது
 • பூச்சிக்கொல்லிகளுக்கு ஏற்றது
 • அதிக சுழற்சி சுழல் வட்டுத் தெளிப்பான், விசைத் தெளிப்பான் மற்றும் வானூர்திகளையும் பயன்படுத்தலாம்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016