பயிர் பாதுகாப்பு கருவிகள் : : அறிமுகம்

அறிமுகம்

 • தெளிப்பானை நன்கு பராமரிக்கவும்
 • தெளிப்பானை பயன்படுத்தும் முன் நன்கு சோதனை செய்யவும்
 • ஒரே வகை இரசாயனங்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தியப்பின் ஒவ்வொரு நாளும் தெளிப்பானின் உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்வது மிக அவசியமாகும்.
 • தெளிப்பானை பயன்படுத்தும் முன், அனைத்து அசைவு பாகங்களிலும் உராய்வு எண்ணெய்யை முழுமையாகவும் தவறாமலும் இட வேண்டும்.
 • தெளிப்பானை, எவ்வளவு நன்றாக வடிவமைத்து, பொருத்தப்பட்டிருந்தாலும், அவைகள் பயன்படுத்தியப்பின் பழுதடைந்துவிடும்.
 • அனைத்து பாகங்களையும் பரிசோதித்து, தேயந்து,உடைந்து மற்றும் சேதமடைந்த பாகங்களை மாற்றவும்.
 • இரசாயன பொருட்களின் மதிப்பை ஒப்பிடுகையில் இதன் மதிப்பு பெயரளவு ஆகும்.  தெளிப்பானில், குழாய் முனை மிகவும் புறக்கணிக்கப்பட்ட துல்லிய பாகமாகும்.
 • குழாய் முனை தேய்ந்து போனால் மற்றும் 10  க்கு அதிகமாக வெளிபட்டால், 2 மணி நேரத்தில் இரசாயனக் கழிவுகள் ஒரு புதிய செலவை ஈடு செய்யும்.
 • எளிய ஆலோசனைகள், விளக்கங்கள், தெளிப்பானின் பாங்களின் வரைபடங்கள் கொண்ட சிறு புத்தகம் புதிய தெளிப்பானுடன் வழங்கப்படுகிறது.
 • தெளிப்பானை பயன்படுத்தியப்பின், அனைத்து பாகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.  இரசாயனங்களின் பயன்பாட்டால் எரிதில் அரிக்க கூடும்.
 • துருபிடிக்கும் பாகங்களுக்கு வர்ணம் பூசவும் மற்றும் இயக்கம் அசயும் பாகங்களுக்கு எண்ணைத் தடவ வேண்டும்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016