பயிர் பாதுகாப்பு கருவிகள் :: வகைப்படுத்துதல்

வகைப்பாடு

 • பயிர்களின் மீது பூச்சிகள் மற்றும் நோயின் தாக்குதல் விஷ இரசாயணங்களின் பயன்பாட்டை தாவரங்கள் வெற்றிக் கொள்ள வேண்டும்.
 • தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய பயிர் வகைகளின் அறிமுகங்களால், புதிய பூச்சிகள் மற்றும் நோய்களும் அறிமுகமாகின்றன. மேலும் அவைகளை கட்டுபடுத்தும் சாதன முறைகளும் உள்ளன.
 • பயிர் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பல ரசாயனங்களை நேரடியாக மனிதர்களால் பயன்படுத்த இயலாது.
 • மேலும் அவைகளை நுண் துகள்களாக பயன்படுத்த வேண்டும்.
 • இது போன்று பயன்பாட்டிற்கு இயந்திரங்கள் இன்றியமையாததாகும்.

தெளிப்பான்கள்

 • தெளிப்பான், தெளிப்பு திரவத்தை நுண் துகள்களாக்கி (இது ஒரு இடைநீக்கம், பால்மம் அல்லது கரைசலாக இருக்காலம்) சிறு துளிகளாக பரவலாக சிறு பலன் கொண்டு வெளியேற்றப்படுகிறது.
 • இது பூச்சிக்கொல்லி திரவம் வெளியேறும் அளவை கட்டுப்படுத்துகிறதுஇ
 • பூச்சிக் கொல்லிகளின் தூசி கலவையை பரப்பப்பயன்படும் இயந்திரம், தூவி (டஸ்டர்ஸ்) என்ழைக்கப்டும்.

தெளிப்பானின் வகைகள் : தெளிப்பான்கள் ஆற்றல் அடிப்படையில் பிரித்து வைக்கவும் மற்றும் தெளிப்பு திரவம் வெளியேற்றப்படும் வேவையைப் பொறுத்து நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

 •  ஹைட்ராலிக் ஆற்றல் தெளிப்பான்
 •  வாயு ஆற்றல் தெளிப்பான்
 • மைய விலக்கு ஆற்றல் தெளிப்பான் மற்றும்
 • இயக்க ஆற்றல் தெளிப்பான்
1. ஹைட்ராலிக் ஆற்றல் தெளிப்பான்
 • ஹைட்ராலிக் ஆற்றல் தெளிப்பான், திரவத்தை அழுத்தத்துடன் ஒரு நேர்மறை இடமாற்ற விசையக்கக் குழாயை பயன்படுத்தி நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.  அல்லது
 • காற்று உட்புகாத கொள்கலனில் தெளிப்பு திரவமானது காற்று பம்பில் காற்றழுத்தத்தை பயன்படுத்தி வெளியேற்றப்படுகிறது.
 • பின்னர் அழுத்தமேற்பட்ட திரவம், தெளிப்பு ஈட்டி மூலம் வெளியேற்றப்படுகிறது. இது தெளிப்பு அளவு மற்றும் முறையை கட்டுப்படுத்துகிறது.
2. வாயு ஆற்றல் தெளிப்பான்
 • இதில் அதிக திசை வேகத்துடன் கூழய காற்று நீரோட்டம், காற்றுந்தி மூலம் உருவாக்கப்படும் மற்றும் ஒரு விரைவி தட்டு, ஈர்ப்பின் மூலம் தெளிப்பு திரவத்தை குழாயின் முடிவு பகுதிக்குச் எடுத்துச் சென்று துளித்துளிகளாக பரப்புகிறது.
3. மைய விலக்கு ஆற்றல் தெளிப்பான்
 • தெளிக்கும் திரவம், ஒரு அதிவேக சுழலும் சாதனத்தின் மையத்தில் குறைந்த அழுத்தத்தில் செயல்படுத்தப்படுகிறது. (தட்டையான, குழிவாக (அ) குவிந்த தட்டு, கம்பிவலை கூண்டு (அ) வாளி, துளையுடன் சல்லடை (அ) நீள் உருளை (அ) தூரிகை) ஆகியவை நுண் துகளாக்கும் கருவியில், நுண்துகளாக்கி மைய விலக்கு விசை மூலம் புறஎல்லையில் பரப்பப்படுகிறது.
 • தெளிப்பானில் விசிறி இல்லாத போது, தெளிப்பானில் உள்ள காற்றுந்தி அல்லது நிலவும் காற்றாடி மூலம் துளிகளை காற்று நீரோட்டத்தை உற்பத்தி செய்து செயல்படுகிறது.
4. இயக்க ஆற்றல் தெளிப்பான்
 • தெளிப்பு திரவம், ஒரு அதிர்வுறும் (அ) ஊசலாடும் முனையுடன் ஈர்ப்பு கொண்டு கரடுமுரடான விசிறி வடிவ தெளிப்பு முறையை உருவாக்குகிறது.
 • களைக்கொல்லிகளை தெளிக்க பயன்படுகிறது.
தெளிப்பானின் வகைகள் : ஆற்றல் பயன்பாட்டை பொறுத்து கைமுறை இயக்கம் மற்றும் ஆற்றலால் இயங்கும் தூவி என வகைபடுத்தலாம்.
கைமுறை இயக்க தூவி :
 • தொகுப்பு தூவி
 • உலக்கை தூவி
 • பெல்லோ தூவி
 • சுழல் முறை தூவி
1. தொகுப்பு தூவி  
 • சில பூச்சிக் கொல்லிகள் கொள்கலனில் வைத்து கை முறையில் பயன்படுத்தப்படும்.
 • பெரும்பாலும் ரப்பர், தோல் (அ) பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது
 • எளிமையான வகை தொகுப்பி தூவிகள்ஃ விரல்களினால் அழுத்தி செயல்படுவதாகும்
2. உலக்கை தூவி
 • எளிய வகை உலக்கை தூவி, ஒரு காற்று பம்ப் மற்றும் தூசி அறையைக் கொண்டது மற்றும் ஒரு நேர்க் குழாய் கொண்ட வெளியேற்றும் தொகுப்பு அல்லது தூசி அறையில் உள்ள மூழயை நகர்த்தி ஒரு சிறு வெளியேற்றும் குழாயின் வெளியேற்றத்தை அதிகரித்தல் குறைப்பதன் மூலம் சரி செய்யலாம்.
 • பம்பில் உள்ள காற்று குழாய் மூலம் கொள்கலனிற்கு சென்று, கிளர்ச்சியுற்று, துவாரம் (அ) குழாய் மூலம் வெளியேறும்.
 • பம்ப் செயல்படும் வேகத்தை பொறுத்து, தூசின் அளவை கட்டுப்படுத்த இயலும்.
 • தடை செய்யப்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தலாம் மற்றும் எறும்புகள், கோழி மற்றும் பண்ணை விலங்குகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
3. பெல்லோ தூவி
 • அடிப்பகுதி – இரப்பர், தோல் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யலாம்.
 • அழுத்தும்போது – தூசிக் காற்று வெளியேறி சிறு மேகப்படலம் போன்று காட்சியளிக்கும்.
 • கையினால் பயன்படுத்தப்படும் பெல்லொ தூவியின் கொள்ளளவு 30 முதல் 500 கிராம்
 • இதனை நேரடியாக கையினாலோ அல்லது அதற்க்காகவெ அமைக்கப்பட்ட கைப்பிடியையோ பயன்படுத்தலாம்.
 • பைத்தூவி (அ) க்னாப்சாக் தூவியின் கொள்ளளவு 2.5 – 5.0 கிலோ ஆகும்.
4. சுழல் முறை தூவி
 • இது ஒரு பல்லிணைப் பெட்டி மற்றும் பெய்கலன் கொண்ட காற்றூதி இது பொய் சுழல் மூலம் இயக்கப்படும்.
 • காற்றூதியில் உள்ள பல்லிணைப் பெட்டி மூலம் பொய் சுழல் இயக்கப்படுகிறது
 • தூசி கிளர்ச்சியடைதல், பெய்கலனிலிருந்து செல்லப்படுகிறது
 • இதனை கையிலே (அ) தோள்பட்டையில் மாட்டிக்கொண்டோ (அ) தொப்பையிலோ பயன்படுத்தும் வகையில் உள்ளன.

WHO (1974) – வின் தூவிகளுக்கான பரிந்துரைகள்

 • பெய்கலன் தகழன் தடிமன் 0.63 மிமீ இருக்க வேண்டும்.
 • பெய்கலனின் தாழ்வான அடிப்பகுதியின் வழியாக தூசி செல்ல அனுமதிக்கிறது.
 • விசிறியின் வேகம்   35rpm மற்றும் இடமாற்று திறன்   0.84 m3 காற்று  / நிமிடம்
பவர் தூவி
 • இது சுழல் தூவியின் அமைப்பை போன்றதாகும் ஆனால் இதனை செயல்படுத்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது
 • மைய விலக்கு ஆற்றலினால் இயங்கும் க்னாப்சாக் தெளிப்பானை, பவர் தூவியாக பயன்படுத்தலாம்

தெளிப்பான் மற்றும் தூவிகளின் பயன்கள்

 • தெளித்தல் மற்றும் தூவும் உபகரணங்கள் பின்வரும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
 • பூச்சிக்கொல்லிகள், சிலந்திக் கொல்லி, பூசணக் கொல்லிகளைக் கொல்லி, போன்றவற்றை தெளிப்பான் மற்றும் தூவிகள் மூலம் பயன்படுத்தலாம்.
 • தாவர ஊட்டச்சத்துக்களை இலை வழித் தெளிக்க தெளிப்பானை பயன்படுத்தலாம்.
hgfh

கை தெளிப்பான்

 • சிறிய, எடை குறைவான மற்றும் சிறிய அலகுடையது
 • கொள்கலனின் கொள்ளளவு 500-1000 மிலி.
 • பொதுவான வீட்டுத்தோட்டம் மற்றும் ஆய்வகங்களில், சிறு பகுதிகளுக்கு தெளிக்க பயன்படுத்தலாம்.
 • இது ஒரு நீர்ம ஆற்றல் தெளிப்பான.
hgfh

க்னாப்சாக் தெளிப்பான்                                                        

 • முதுகில் சுமந்தபழ பயன்படுத்தப்படும் தெளிப்பான்களை க்னாப்சாக் தெளிப்பான என்றழைக்கப்படுகிறது.
 • கொள்கலனினுள்      ஹைட்ராலிக் பம்ப் பொருத்தப்பட்ட கையினால் செயல்படுத்தப்படும் கனாப்சாக் தெளிப்பான பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
 • கொள்கலனின் அடிப்பகுதியில் உலக்கை இருப்பதனால், பராமரிப்பு எளிதாகிறது
 • அழுத்தத்திற்குட்பட்ட திரவம், பம்பின் முடிவு முனையில் உள்ள வெளியேற்று குழல் மூலம் தெளிக்கப்படுகிறது.
ghfghds

அசைந்தாடும் தெளிப்பான்
இதில் தெளிப்பு இயந்திரம் மரப்பலகையின் மீது இயக்கும் கம்பி, வால்வுகள், அழுத்த அறை, உறிஞ்சுகுழாய் மற்றும் தெளிக்கும் குழாய் ஆகியவற்றுடன் இருக்கும்.

 • இயக்கும் கம்பியை இயந்திரத்தில் இருந்து வெளிப்புறமாக இழுக்கும் பொழுது, திரவமானது பம்பினுள் வருகிறது.
 • இயக்கும் கம்பியை முன்னோக்கி தள்ளும் பொழுது, உறிஞ்சப்பட்ட திரவமானது அழுத்த அறையில் இருக்கும் வால்விற்கு வருகிறது.
 • இவ்வாறு தொடர்ந்து செய்யும் பொழுது கீழ்நோக்கிய அழுத்தத்தினால் உறிஞ்சும் குழாய், பந்து இணைப்பு, தெளிக்கும் குழாய், அழுத்த அறையின் பகுதி முழுவதும் திரவமானது சேர்கிறது.
 • பின்னர் விசை வால்வு திறந்து திரவத்தை தெளிப்பு முனைக்கு கொண்டு சென்று சிறு துகள்களாக தெளிக்கிறது.
 • பொதுவாக ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 14 முதல் 18 கிலோகிராம் வரையிலான அழுத்தத்தை அழுத்தக்கலனில் உருவாக்கி இலகுவாக தொடர்ந்து திரவத்தை தெளிப்பதற்கு உதவுகிறது.
sdddfhtfht

வாளித்தெளிப்பான்

 • வாளித்தெளிப்பானானது திரவத்தை நேரடியாக திறந்தவெளிக் கலனில் இருந்து தெளிக்க உதவுகிறது.
 • நீரீயல் பம்ப் ஆனது வாளியினுள் அசையாதவாறு இணைக்கப்படுகிறது.
 • திரவமானது இயக்கும் கம்பியை இழுக்கும் பொழுது, உறிஞ்சும் பந்து வால்வினுள் சென்று பின்னர் அழுத்தக்கலனினுள் பந்து வாழ்வின் மூலம் செல்கிறது.
 • இயக்கும் கம்பியை தொடர்ந்து இயக்கும் பொழுது, அழுத்தக்கலனிலுள் அழுத்தம் உருவாகி தெளிப்புக் குழாயினுள் செல்கிறது.
 • தேவையான அழுத்தம் கிடைத்தவுடன் திரவமானது தெளிக்கப்படுகிறது.
 • அனைத்து வகையான வாளித்தெளிப்பான்களிலும் ஒரு சதுர சென்டி மீட்டருக்கு 4 கிலோகிராம் அளவில் அழுத்தம் உருவாகும்.
hgfh

மிதித் தெளிப்பான்

 • இது மாற்றம் செய்யப்பட்ட ராக்கர் தெளிப்பான் வகையாகும்.
 • பம்பானது செங்குத்தாக தேவையான உபகரணங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
 • மிதியை இயக்கும் போது இயக்கும் கம்பி மேலும் கீழுமாக அசைக்கப்படுகிறது.
 • இயக்கும் கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள பந்து வால்வானது, திரவத்தை இயக்கும் கம்பியை கடக்கச் செய்து அழுத்தக்கலனில் அழுத்தம் உருவாகச் செய்கிறது.
 • விசையினை மேல்நோக்கி இயக்கும் போது திரவமானது உறிஞ்சப்பட்டு, அழுத்தப்பட்டு அழுத்தக்கலனிலுள் செல்கிறது, விசையினைக் கீழ் நோக்கி இயக்கும் போது இயக்கும் கலனைக் கடந்து தெளிக்கும் பம்பினுள் செல்கிறது.
 • மிதித்தெளிப்பானில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 17 முதல் 21 கிலோ கிராம் அழுத்தம் உருவாகிறது.
hgfhhgdh

விசைத்தெளிப்பான்

 • அனைத்து தெளிப்பான்களிலும், திரவத்தைத் தெளிப்பதற்கு முன் ஒருங்கிணைந்த மின்சுற்றைக் கொண்ட இயந்திரத்தின் மூலம் இயந்திர ஆற்றல் உபயோகப்படுத்தப்பட்டால் அவை விசைத் தெளிப்பான்கள் எனப்படும்.
 • இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் விசைத்தெளிப்பான்கள் வாயு ஆற்றலை அடிப்படையாக கொண்ட பையில் சுமக்கும் தெளிப்பான்கள் ஆகும்.
 • இதில் தாங்கும் அமைப்புடன் ஊதுகுழல் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.
 • 1.2 முதல் 3 குதிரைத்திறன் கொண்ட இயந்திரத்துடன் திரவக்கலன் மற்றும் எரிபொருள்கலன் நிலையாக பொருத்தப்பட்டு இருக்கும்.
ghfhsdfds
 • இதில் மடிப்புகளுடைய குழாயானது ஊதும் குழல் அமைப்புடன் இணைக்கப்பட்டு அதிக விசையுடைய காற்றை எடுத்துச் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும்.  இதன் மறுமுனையில் வெட்டு முனை, திரவம் துளித்துளியாக தெளிப்பதற்காக திரவக் கலனில் கட்டுப்பாட்டு வால்வுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
 • ஊதும் அமைப்பின் மேற்புறத்தில் திரவத்தை அழுத்துவதற்கு தேவையான காற்றை அளிக்க காற்றுக் குழாய் ஒன்று அமைப்பட்டுள்ளது.
 • இதனை இயக்கும் போது இயத்திரத்தை தரையில் வைத்து இயங்கச் செய்து பின்னர் இயக்குபவரால் எடுத்துச் செல்லப்படுகிறது.
 • ஊது குழாய் காற்றினைக் கொண்டு திரவத்தை மடிப்புக்களுடைய குழாயினுள் செலுத்துகிறது.
 • வெட்டு முனையில் உள்ள வால்வினை திறப்பதன் மூலம் அல்லது தேர்வுசெய்யப்பட்ட வால்வுகளின் மூலம் திரவம் வெளியேற்றப்படுகிறது.
 • அதிக விசையையுடைய காற்றானது திரவத்துளிகளை சிறுசிறு துளிகளாக மாற்றி செடிகளின் மேல் விழச்செய்கிறது.
 • வெரிவரும் காற்றானது 175 முதல் 320 கி.மீ வேகத்தில் ஒரு நிமிடத்திற்கு2.7 முதல் 9.1 சதுர மீட்டரில் பரவுகிறது.
 • திரவக்கொள்கலனின் அளவு 7 முதல் 12 லிட்டர் வரை வேறுபடுகிறது. எரிபொருள் கொள்கலன் 0.75 முதல் 2.25 லிட்டர் வரையிலும் திரவத்தை வெளியிடும் திறன்

  நிமிடத்திற்கு 0.5 முதல் 5 லிட்டர் வரையிலும் உள்ளது. தெளிப்பானில் கீழ்கண்ட சில மாறுதல்களைச் செய்வதன் மூலம் விசை தூசு தெளிப்பானாக மாற்றலாம்.
  • தெளிப்பானில் உள்ள வடிகட்டியை நீங்குவதற்கு வேதிப்பொருள் நிரம்பும் மூடி நீக்கப்பட வேண்டும்.
  • திரவ கொள்கலனின் கீழ் இருக்கும் திரவ வெளியேற்றும் குழாய் வெட்டும் முனையுடன் நீக்கப்பட வேண்டும்.
  • கொள்கலன் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு, ஈரப்பசை முற்றிலுமாக இல்லாமல் செய்ய வேண்டும்.
  • தூசுகளை கலக்கும் குழாய் வேதிப்பொருள் கொள்கலனின் கீழ் இணைக்கப்பட வேண்டும்.
  • கலக்கும் குழாயின் கீழ்பகுதியில், வேதிப்பொருள் அடைத்துக் கொள்ளாமல் இருக்க துளைகள் இருக்கும்.
  • தூசுகளை ஊறிஞ்சும் குழாயானது வேதிப்பொருள் கலனில் வைக்கப்பட்டிருக்கும் மேலும் இந்தக் குழாயில் பெரிய துளைகள் இடப்பட்டு இருக்கும்.
  • தூசுகளை உறிஞ்சும் குழாய் மற்றும் ஊதும் இணைப்பு இரண்டும் மடிப்புகளுடைய குழாயினுள் தூசு வெளியேறும் குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மின்கல அல்லது தீவிர குறைந்த தொகுதி தெளிப்பான்

 • தேவைப்படும் வேதிப்பொருளை குறைப்பது மற்றும் உபயோகப்படுத்தப்படும். நீரினை முற்றிலும் நீக்குவதே இந்த வகையான தெளிப்பான்களை கண்டறிய காரணமாக இருந்தது.

அடிப்படைத் தேவைகள்

 • தேர்தெடுத்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட துளிகள் (110-250 Hm நுண்ணிய தெளிப்பான்களுக்கு, பனித் தெளிப்பான்களுக்கு 50-100 Hm சாரல் தெளிப்பான்களுக்கு 0.1 to 50 Hm)
 • துல்லியமான கட்டுப்படுத்தப்பட்ட வெளிவிடும் திறன்.
gtdg
 • தகுந்த பாகுத்தன்மை மற்றும் அடர்த்தியான ஆவியாக பூச்சிக்கொல்லிகள்.
 • தெளிக்கும் திரவத்தின் அளவு குறைவதனால், மின்கலத்தினை மீன்நிரப்பு, செய்வதற்கு, தண்ணீர் சேகரிப்பதற்கு மற்றம் பூச்சிக்கொல்லி நிரப்புவதற்கான நேரத்தினைக் குறைக்கிறது.
 • விசைத்தெளிப்பானால் ஒரு நாளில் அதிகபட்சம் 3 எக்டேர் மட்டுமே தெளிக்க முடியும் ஆனால் மின்கல தெளிப்பான் மூலம் 8 மணி நேரத்தில் 8 எக்டேர் அளவிற்கு தெளிக்க முடியும்.
 • மின்கலத்தில் இயங்கும் தீவிர குறைந்த தொகுதி தெளிப்பானின் நீண்ட கைப்பிடி சுழல் வட்டு உறையுடன் குதிரைத்திறன் கொண்ட நேர்மின்சாரா இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
 • சுழல் வட்டு இயங்கும் போது திரவம் தெளிப்பிற்காக இயந்திரத்தின் அருகே அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலீன் குடுவை பொருத்தப்பட்டிருக்கும்.
 • மைய நோக்கு விசையின் மூலம், திரவமானது முனை வழியே சிறு துளிகளாக வெளியேறுகிறது.
 • இதில் தெளிக்கும் போது திரவமானது இயங்குபவரிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளி விழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • தெளிக்கும் திரவம் காற்றின் மூலம் தெளிப்பவரின் மேல் பாதிப்பினை ஏற்படுத்தாமல் இருக்கும் நிலையில் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.
 • தெளித்த பின், பாராபீன் கொண்டு தெளிப்பு முனைகளை சுத்தப்படுத்துவதன் மூலம் தங்கியிருக்கும் வேதிப்பொருள் வெளியேற்றப்படும்.
 • முறையாக சுத்தப்படுத்தப் படவில்லையெனில் அடைப்பு ஏற்பட்டு திரவம் வெளியேறாமல் தடுத்துவிடும்.

விசைத்தெளிப்பானில் இயங்கும் உறிஞ்சும்பொறி

இதனை இயக்கும் போது ஊதுகுழலில் ஏற்படும் அழுத்தமானது கீழ்நோக்கி நகர்த்தப்பட்டு மடிப்புகளுடைய குழாயிலின் மூலம் பூச்சிகள் மற்றும் தூசுகள் 0.5 முதல் 1 மீ தூரத்தில் இருப்பவையும் இதில் சேகரிக்கப்படுகிறது
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016