பயிர் பாதுகாப்பு :: பூச்சிக்கொல்லிகள்
பாராகுவாட் கூட்டு

வரி
சை எண்

பூச்சிக் கொல்லி பெயர்

நச்சின் அறிகுறிகள்

முதலுதவி நடவடிக்கைகள்

சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள்

1.

பாராகுவாட் டைகுளோரைடு

வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வாயில் எரியும் வலி, தொண்டை மற்றும் மேல் வயிறு, வாய்/ தொண்டை புண் ஏற்படுதல், தோல் மற்றும் கண்களில் அதிக அடர்வு எரிச்சலை ஏற்படுத்தும். தெளிப்பின் போது உள்ளிழுக்கப்படும் நச்சினால் தொண்டை வலி, கரகரத்த குரல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், உள்பாகங்கள் எரிச்சலாக இருக்கும்.

தலைச்சுற்று, தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் தசைவலி

புரோட்டினூரியா, சிறுநீரில் இரத்தம், காய்ச்சல், இரத்ததில் யூரியாமிகைமையைத் தொடர்ந்து சிறுநீர்க் குறைவு/ சிறுநீர் வெளியேறா நிலை

உறுதிபடுத்தும் சோதனை :
i)நிற அளவை முறை மூலம் சிறுநீரில் உள்ள பாராகுவாட்டை அறிதல்.
ii) அலைமாலை (ஸ்பெக்ட்ரோபோட்டோ மெட்ரிக்) முறை மூலம் இரத்தம் மற்றும் சிறுநீரில் பாராகுவாட் கண்டறிதல்.

 

அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும்.

தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.

கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும்.

சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும்.

உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.  பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும்.

மருத்துவ உதவி :
பாதிக்கப்பட்டவரை

இரைப்பைக் கழுவல் செய்யவும். புல்லர்ஸ் எர்த் ( ஓர் உறிஞ்சக்கூடிய ) 30% உடன் 30% நீர்மம் சேர்த்து கொடுக்கவும். 20% மானிடோல் கரைசல் 200 மிலி (அ) 30 கிராம் மெக்னீசியம் சல்பேட்டில் 200 மிலி தண்ணீர் சேர்த்து இரைப்பை குழல் வழி கொடுக்கவும். முடிந்தவரை புல்லர்ஸ் ஏர்த்யை ஆரம்ப நிலையில் கொடுக்கவும்.

புல்லர்ஸ் எர்த் கிடைக்கவில்லை யென்றால் 7.5% பென்ட்டோனேட் 1 லிட்டர் (அ)  வினையூக்கக் கரித்துண்டு 50-100 கிராம் 200 மிலி தண்ணீரில் கலந்து கொடுக்கவும்.

திரவசமநிலை விளக்கப்படத்தை தயாரிக்கவும். போதுமான வாய் வழி (அ) IV திரவங்கள் கொடுக்கவும்.

 தீவிரமான சிறுநீரக செயலிழப்பு இருப்பின், வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு (அ) ஹெமோடையாலிசிஸ்க்காக குறிப்பிடப்படுகிறது.

சுவாசித்தலில் சிரமம் உள்ள போது,  ஆக்சிஜன் நுரையீரலுக்கு செல்லுதல் ஆபத்தானதாகும்.

முதியவர்களுக்கு,  சார்பிட்டால் 1-3 கிராம் உடல் எடைக்கு அதிகபட்சம் 150 கிராம் மற்றும் குழந்தைகளுக்கு, 1-1.5 கிராம்  உடல் எடைக்கு 50 கிராம் வழங்கவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015