| 1.  | 
	      அலக்லோர்  | 
	      குமட்டல், வாந்தி, அமைதியின்மை, நடுக்கம், பயம், வலிப்பு,    கோமா, சுவாசக்கோளாறு மற்றும் இறப்பு   | 
	      அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம்    மாற்றவும்.  
	        தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும்    நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.  
	        கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி    கழுவவும்.  
	        சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள    திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை    தளர்த்தி விடவும்.  
	        உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன்    இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை    உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில்    இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.     பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும்.    சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து    சுவாசம் கொடுக்கவும்.  
	        மருத்துவ உதவி :  
	          பாதிக்கப்பட்டவரை   | 
	      1.2-4  லிட்டர் தண்ணீர்    கொண்டு இரைப்பையை கழுவவும். ஒரு கப் தண்ணீரில் 30 கிராம் ( 10 அவுன்ஸ்) சோடியம்    சல்பேட் கொண்டு ஆழ்ந்த உணர்ச்சி தூய்மை செய்யவும். 
	        அமைதியின்மை அல்லது    கொந்தளிப்புக்கு, பார்டியூரேட்ஸ்/ டையாசீபம் அதற்கான அளவுகளில் தேவையான போது    மீண்டும் கொடுக்கவும்.  
	        சுவாசித்தல் மற்றும் மூச்சொலியை    கூர்ந்து கவனிக்கவும். தேவைப்பட்டால் இயற்கையாக (அ) செயற்கையாக ஆக்ஸிஜன்    வழங்கவும்.  
	          எண்ணெய், எண்ணெய் மலமிளக்கிகள்    மற்றும் எப்பி நெப்பிரின் ( அட்ரீனலின்) தூண்டு பொருள்கள் ஆகியவற்றை    தவிர்க்கவும்.  
	        கால்சியம் குளுகோனேடையை (10 மிலி    அம்யூலில் 10%) 4 மணி நேரத்திற்கு    ஒருமுறை நரம்பூடாக கொடுக்கவும்.  |