பயிர் பாதுகாப்பு :: பூச்சிக்கொல்லிகள்

ஆர்கனோ பாஸ்பரஸ் பூச்சிக் கொல்லிகள்

வரி
சை எண்

பூச்சிக் கொல்லி பெயர்

நச்சின் அறிகுறிகள்

முதலுதவி நடவடிக்கைகள்

சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள்

1.

காப்பர் ஹைட்ராக்சைடு

ஆரம்ப
அறிகுறிகள் :

வாந்தி, குமட்டல், இரத்தத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் தலைவலி அதிர்ச்சியினால் நீர்போக்கு ஏற்படலாம்.

கண் இமைகளில் வீக்கம் கண் வலி, விழி வெண் படலத்தில் புண்கள் ஏற்படலாம்

கல்லீரல் வீக்கம் மற்றும் மஞ்சள் காமாலை
இரத்த சிவப்பணுச் சிதைவு மற்றும் மெதிமோக்ளோபினெமியா

அல்புமின் கலந்த சிறுநீர், சிறுநீரில் இரத்த சிவப்பணு நிறப்பொருள் மற்றும் சில நேரங்களில் தீவிரமான சிறுநீரக செயலிழப்பு

கடுமையான விஷ பாதிப்பு – கோமா வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டவரை அசுத்தமான சுழலிலிருந்து இடமாற்றவும்.

அதிக அளவு நீர் அல்லது பால் குடிக்கவும் (உடலில் உள்ள நச்சின் அடர்வை குறைக்கவும் ) மற்றும் வாய், உணவுக்குழல் மற்றும் குடலில் உள்ள அரிப்பைக் குறைக்கும்.

போதிய அளவு வயிறு சுத்தமாகும் வரை தீவிரமாக வாந்தியெடுக்கவும், மூச்சுக் குழலுக்குல் குழல் செருகுதல் மூலம் வயிற்றை சுத்தம் செய்தல், உறிஞ்சு நீக்குதல் மற்றும் கழுவுதல் மூலம் சுவாசக் குழாயிலிருந்து வயிறு உள்ளடக்கங்கள் வரை பாதுகாக்கலாம்.

வினையூக்கக் கரித்துண்டுகளை கழுவும் திரவத்தில் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் ஆர்கனோமெட்டாலிக் கூட்டின் வீரியத்தை குறைக்கலாம். ஆனால் இரசாயன காப்பர் கூட்டிற்கு குறைந்த பயன்தரும்.

எச்சரிக்கை : நச்சின் தீவிர அரிப்பின் காரணமாக இரைப்பை அடை காப்பினால் உணவுக் குழாயில் துளை ஏற்படும்.

 

i) நோய் அறிகுறிகளை, குலுக்கோஸ் மற்றும் எலக்ட்ரோலைட் கொண்ட நரம்பு வழி திரவங்கள் நிர்வகிக்கின்றன. தேவையான திரவ சமநிலை மற்றும் சரியான இரத்த எலக்ட்ரோலைட் செறிவை கண்காணிக்கவும். அதிர்ச்சி ஏற்பட்டால், வாசோபிரெசர் அமைன்ஸ் மற்றும் இரத்தம் செலுத்தவும்.

ii) பிளாஸ்மாவை வைத்து, குருதிச்சிதைவு ( இலவச ஹீமோகுலோபின் ) மற்றும் மெதிமோகுளோபினை கண்காணிக்கவும். குருதிச் சிதைவு ஏற்பட்டால், சிறுநீரின் அமில காரத் தன்மையை 7.5 க்கு கொண்டுவர சோடியம் பைக்கார்பனேட் (லிட்டருக்கு 44 -88 mEq/ லிட்டர்) உட்செலுத்தப் படுவதற்கான திரவத்துடன் சேர்த்துக் கொடுக்கவும். மேலும் மானிடோல் சிறுநீர்ப் பெருக்கு பயன்படுத்தலாம். மெதி மோக்ளோபினெமியா தீவிரமடையாதவரை     (30 – 40 %) மெத்திலின் புளூ பயன்படுத்துதலை தவிர்க்கவும்.

iii) கடுமையான வலியின் போது மார்பின் பயன்படுத்தலாம்

iv) காப்பர் விஷத்திலுள்ள இடுக்கு இணைப்பு காரணியின் மதிப்பு  நிறுவப்படவில்லை. காப்பர் வெளியேற்றத்தை முடக்குதல் மற்றும் நோய் ஒழிப்பின் போது தோற்றத்தினால் உறுதியாகும். நச்சுத் தீவிரத்தின் போது இதன் பயன்பாடு உத்திரவாதமாக தோன்றுகிறது.

மருந்தளவு : கடுமையான நச்சு 1 ம் நாள் – 3 மி. கிராம்/ கி.கி (4 மணி நேரம் ) 2 ம் நாள்
3.0 மி.கிராம்/கி.கி (4 மணி நேரம் ) 3 ம் நாள்
3.0 மி.கிராம்/கி.கி (6 மணி நேரம் ) மற்றும் தொடர்ந்து 10 நாட்கள் வரை (அ) குணமடையும் வரை
3.0 மி.கிராம்/கி.கி (12 மணி நேரம் ) லேசான நச்சு : 1 மற்றும் 2 ம் நாள் 2.5 மி.கிராம்/கி.கி (6 மணி நேரம் )
3 ம் நாள் 2.5 மி.கிராம்/கி.கி  (12 மணி நேரம் ) மற்றும் தொடர்ந்து 10 நாட்கள் வரை (அ) குணமடையும் வரை 2.5 மி.கி/ கி.கி தினசரி.
v) அடுத்ததாக டி-பெனிசிலமின் பயன்படுத்தலாம். முதியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு – 0.5 கிராம் ( 6மணி நேரத்திற்கு ஒருமுறை ) சாப்பாற்றிற்கு முன் சுமார் 5 நாட்களுக்கு படுக்கை நேரத்தில் 30 – 60 நிமிடத்தில் கொடுக்கவும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு -0.1 கிராம்/கி.கி உடல் எடைக்கு, ஒரு நாளைக்கு 1 கிராமுக்கு மிகாமல், 4  மருந்தளவாக பிரித்து, படுக்கை நேரத்தில் உணவுக்கு முன்னால் 30 – 60 நிமிடத்தில் கொடுக்கவும்.

எச்சரிக்கை : குறிகிய கால சிகிச்சையில், தீங்கு விளைவிக்கும் விளைவுகள் அரிதானவை. பென்சிலின் ஒவ்வாமை நபர்கள், டி- பெனிசிலமினாலும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் BAL கொண்டு சிகிச்சை பெற இயலும்.

2.

காப்பர் ஆக்சி குளோரைடு

3.

காப்பர் சல்பேட்

4.

குயூப்ரஸ் ஆக்சைடு


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015