பயிர் பாதுகாப்பு :: புதிய பி.டி. தொழில்நுட்பம்

பி.டி.யால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு

ஆய்வக சோதனை நடத்தியதன் படி நாய், பன்றி, எலி, மீன், தவளை மற்றும் பறவைகளுக்கு பி.டி. புரதத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் விவசாயத்தில் நன்மை தரும் பூச்சிகளான ஊண் உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

பி.டி. பயிரின் நன்மைகள்

  • பி.டி. பயிரானது பருவம் முழுவதும் பூச்சி எதிர்ப்புத்தன்மை பெற்றுள்ளது.
  • வேதி பூச்சி மருந்து தெளிப்பதைக் குறைத்துள்ளது. இதனால் பூச்சி மருந்து வாங்க செலவாகும் பணத்தையும் பூச்சி மருந்து தெளிக்க ஆகும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.
  • இது பூச்சி தாக்குதலினால் ஏற்படும் விளைச்சல் குறைவதை தடுத்து அதிக விளைச்சலைக் கொடுக்கிறது.
  • பி.டி. குறிப்பிட்ட பூச்சி குடும்பத்திற்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பயிருக்கு தீங்கு தரும் பூச்சி இனங்களை அழிக்க உதவுகிறது.
  • மனிதன் வேதியியல் பூச்சி கொல்லி மருந்துடன் தொடர்பு கொள்ளும் நிலைமையைக் குறைக்கிறது.
  • பி.டி. விரைவில் சிதைந்து விடுவதால் மண் மற்றும் நீர் மாசுபடுவது தடுக்கப்படுகிறது
  • வேதியியல் பூச்சிக்கொல்லியால் ஏற்படும் மண், நீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுபாடு குறைகிறது.
  • உணவுப்பொருட்கள் வேதியியல் பூச்சி கொல்லிகளின் எஞ்சிய நஞ்சில்லாமல் கிடைக்கிறது.
பி.டி. பயிர் பயிரிடுவதால் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சினைகள்
பூச்சியானது பி.டி. நச்சு புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை அடைவதைக் கட்டுப்படுத்த 20% பி.டி. அல்லாத பயிரும் 80% பி.டி. பயிரும் நிலத்தில் பயிரிட வேண்டும். பி.டி. அல்லாத 20% பயிரில் வளரும் பூச்சிக்கும் 80% பி.டி. பயிரில் வளரும் பி.டி. புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை அடைந்த பூச்சிக்கும் இடையே பிறக்கும் சந்ததி பி.டி. புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை இல்லாததாக இருக்கும். எனவே 20% பி.டி. அல்லாத பயிரைப் பயிரிடுவதால் பூச்சியானது பி.டி. புரதத்திற்கு எதிர்ப்புத்தன்மை அடைவதைத் தாமதமாக்குகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015