முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: சூரியகாந்தி

சூரியகாந்தி :

பூச்சி மற்றும் நோய் கண்காணித்தல்:

 • பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பூச்சி மற்றும் நோய் தாக்குதலை மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளையும் கண்காணிக்க வேண்டும்
 • 5ல் இருந்து 10 கி.மி தூரத்தில் 10 இடங்களில், 10 தாவரங்களில் குறிப்புகளை எடுத்து கண்காணிக்க வேண்டும்
 • ஹெலிக்கோவெர்பா மட்டும் ஸ்போடார்டிராவை கண்காணிக்க எக்டர்க்கு 10 இனக்கவர்ச்சிப் பொறி அமைத்து கண்காணிக்கலாம்

விதைக்கும் முன் பருவம்:

 • கோடை உழவு நன்கு செய்ய வேண்டும்
 • சுத்தமான சாகுபடி செய்ய வேண்டும்
 • ட்ரைக்கோடெர்மா ஹார்சியானம் (அ) ட்ரைக்கோடெர்மா விரிடி விதை நேர்த்தி செய்து நோய்களை கட்டுப்படுத்தலாம்
 • வெர்டிசிலியம் குளோனிடோஸ்பேரியம் 2 கிலோ / எக்டர் எடுத்து மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடுவதால் நூற்புழுவை கட்டுப்படுத்தலாம்

விதைக்கும் பருவம்:

 • எதிர்த்து வளரக்கூடிய இரகங்களை தேர்வு செய்யலாம்
 • நோயில்லா சான்றிதளிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்தலாம்
 • முன்பாகவே விதைக்க வேண்டும்
 • வெட்டுப்புழு தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் 15 - 20 செ.மி வரப்பில் பயிர் செய்யலாம்
 • வரல்குருவிகளை விரட்ட இயந்திரங்களை பயன்படுத்தலாம்
 • டவ்னிமில்டில் மற்றும் சூரியகாந்தி அழுகல் நோய் தாக்கப்பட்ட தாவரங்களை பிடுங்கி அழித்து விடவேண்டும்

தாவரம் வளரும் பருவம்:

 • சிலந்திகள், கொடிசியா, அன்தோகோரிட்ஸ், க்ரைசோபா, பொறி வண்டுகள், மானிடிட்ஸ் மற்றும் ரெடுவிட் பூச்சிகளை பாதுகாக்கலாம்
 • 1.5 பறவை தாங்கிகளை ஒரு ஹெக்டர்க்கு வைத்து புழுக்களை அழிக்கலாம்
 • பயிரின் முதன்மை பருவத்தில் 1 - 2 கிரைசோபா புழுக்களை விடலாம்

பூக்கும் பருவம்:

 • என்.பி.வி 250 எல்.இ ஹெலிக்கோவெர்பா மட்டும் ஸ்போடார்டிராவிற்கு பயன்படுத்தலாம்
 • பி.டி.குர்ஸ்டாகியை ஸ்போடார்டிராவை கட்டுப்படுத்த பயன் படுத்தலாம்
 • பயிரின் முதன்மை பருவத்தில் 1 - 2 கிரைசோபா புழுக்களை விடலாம்
 • சிலந்திகள், கொடிசியா, அன்தோகோரிட்ஸ், க்ரைசோபா, பொறி வண்டுகள், மானிடிட்ஸ் மற்றும் ரெடுவிட் பூச்சிகளை பாதுகாக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015