முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: சோயாமொச்சை
சோயாமொச்சை :

பூச்சி மற்றும் நோய்களை கண்காணித்தல்:

 • சமுதாயத்தில் உள்ள அனைவரும் பூச்சியின் எண்ணிக்கையைக் கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்
 • அடிக்கடி ஒவ்வொரு 15 நாட்களுக்கும் பூச்சியின் தாக்குதல் மற்றும் எண்ணிக்கையைக் கண்காணித்து உயிரியல் கட்டுப்பாடு காரணிகளின் திறன்களை மதிப்பீடு செய்யலாம்
 • ஒவ்வொரு 5 லிருந்து 10 கிலோ மிட்டர் தூரத்திற்கு எக்டர்க்கு 10 இடங்களில், ஒரு இடத்திற்கு 5 தாவரங்களில் தேர்வு செய்து பூச்சிகளை கண்காணிக்க வேண்டும்
 • இனக்கவர்ச்சிப்பொறி எக்டர்க்கு 10 வைத்து ஸ்போடார்டிரா லிட்யூராவை கண்காணித்து கவர்ந்து அழித்துவிடலாம்
 • 125 வாட்ஸ் பாதரஸ ஆவி விளக்குப்பொறி சாயங்காலத்தில் 2 மணி நேரம் வைத்து வெளிச்சத்திற்கு கவர்ந்து வரும் பூச்சிகளைக் கண்காணித்து அழித்துவிடவேண்டும்

விதைக்கும் முன் பருவம்:

 • கோடை உழவு செய்யவேண்டும்
 • பருவ காலத்திற்கு முன்னால் விதைப்பதை தவிர்க்கவும்
 • புளுக்குளோராலின் (1 - 1.5 கிலோ / எக்டர்) (அ) ட்ரைபுளுராலின் (0.96 - 1.2 கிலோ / எக்டர்) எடுத்து மண்ணில் புதைத்துவிட வேண்டும். அவ்வாறு செய்தால் பெரிய இலை களைகளைக் கட்டுப்படுத்தலாம்
 • குறுகிய வரிசை இடைவெளி (20செ.மி) + அதிக விதை அளவு (125 கிலோ / எக்டர்) + ஆக்ஸடயசோன் 1 கிலோ (முளைக்கும் முன்)
 • கோடைக்கால காலையில் மண்ணில் சிறிது நீர்ப்பாய்ச்சி வெப்பலூட்டம் செய்து பாலிதீனால் மூடிவிட வேண்டும். நீர் ஆவியாகி களைகளின் விதைகளை வெப்பநீராவியினால் கொன்றுவிடும்

விதைக்கும் பருவம்:

 • பூச்சி அல்லது நோய் எதிர்ப்பு இரகங்களை பயன்படுத்தவும்
 • சரியான அளவு விதை பயன்படுத்த வேண்டும்(70 - 100 கிலோ / எக்டர்)
 • பருவ காலத்தில் முன் விதைப்பதை தவிர்க்கவும்
 • நைட்ரஜன் உரங்களை அதிகம் பணன்படுத்துவதை தவிர்க்கவும்
 • சாம்பல் சத்து உள்ள உரங்களை போடவேண்டும்
 • சோயாமொச்சையுடன் முன்னபே காய்க்கும் துவரை, மக்காச்சோளம், அல்லது சோளம் ஏதேனும் ஒன்றை 4:2 என்ற விகிதத்தில் ஊடுபயிரிடலாம்
 • நச்சுயிர் நீர்க்கப்பட்ட விதைகளை பயிரிடலாம்
 • சோயாமொச்சையுடன் சுழற்ச்சி முறையாக நச்சுப்பயிரியின் தாக்குதலுக்கு இணங்காத பயிர்களை பயிரிடலாம்
 • தலை, மணி, சாம்பல் மற்றும் கந்தகசத்து உள்ள உரங்களை 20:60 - 80:20:20 கிலோ / எக்டர்
 • முதல் 30 - 45 நாட்கள் வரை பயிர்களை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள இரண்டுமுறை கையில் களையெடுக்க வேண்டும்
 • திரம் மருந்தை 3 கிராம் 1 கிலோ விதைக்கு எடுத்து விதைநேர்த்தி செய்யவேண்டும். அடுத்ததாக ரைசோபியம் ஜப்பானிக்கம், மணிச்சந்தை கிடைக்கும் தன்மையாக மாற்றும் பாக்டீரியாக்களை 5 + 59 / கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்
 • களைகள் முளைக்கும்முன் அலாகுளோர் (2.5 கிலோ / எக்டர்) அல்லது மெட்டலாகுளோர் (1கிலோ / எக்டர்) தெளித்தால் புல்லைப் போன்ற களைகளை கட்டுப்படுத்தும். மெட்ரிபுசின் (0.35 - 0.525 கிலோ / எக்டர்) தெளித்தால் புல் மற்றும் அகன்ற இலைக் களைகளைக் கட்டுப்படுத்தும்
 • விதைக்கும் தருணத்தில் போரேட் 10 கிலோ / எக்டர்க்கு போட வேண்டும்
 • ஸ்கிலிரோசியம் தாக்கிய நாத்துகளை பிடுங்க எறிய வேண்டும்

பயிர் வளரும் பருவம்:

 • கிர்புல் வண்டுகளை சேகரித்து அழித்துவிடலாம், தாக்கிய பாகங்கள் முட்டை குவியல்கள், கம்புளி புழுக்கள், புகையிலைப் புழு ஆகியவற்றை சேகரித்து அழிக்க வேண்டும்
 • சிலந்திகள், பல்லிகள், பொறிவண்டுகள், டேக்னிட் ஈ, தட்டாம்பூச்சி, ஊசித்தட்டான் மற்றும் கும்பிடு பூச்சி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்
 • ஆக்சிடெமட்டான் மெதில் 500 - 1000 மி.லி / எக்டர், டைமிதோயேட் 750 - 1000 மி.லி / எக்டர் விதைத்த இரண்டு வாரங்கள் கழித்து முளைத்த பின் தெளிக்க வேண்டும். மற்றும் போரேட் விதைக்கும் பருவத்தில் போடவில்லை என்பதனை உறுதி செய்ய வேண்டும்
 • துரு நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 1500 - 2000 மி.லி / எக்டர் கெக்ஸ்கோனசோல் அல்லது புதுப்பிகேனசோல் அல்லது ட்ரைடெமட்டான் 0.1 சதவிதம் தெளிக்கலாம்

பூக்கும் பருவம்:

 • இலை அழிப்பான்கள், புகையிலை புழுக்கள், தண்டு ஈ, மற்றும் கிர்டில் வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ட்ரைசுசோபாஸ் 625 மி.லி / எக்டர், குயினால்பாஸ் 1000 மி.லி / எக்டர்

பூச்சி மற்றும் நோய்களைக் கண்காணித்தல்:

 • சமுதாயத்தில் உள்ள அனைவரும் பூச்சியின் எண்ணிக்கையைக் கண்காணித்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்
 • ஒவ்வொரு 5லிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் எக்டர்க்கு 10 இடங்களில் ஒரு இடத்திற்கு 5 தாவரங்களில் தேர்வு செய்து பூச்சிகளை கண்காணிக்க வேண்டும்
 • விளக்குப்பொறி சாயங்காலத்தில் 2 மணிநேரம் வைத்து வெளிச்சத்திற்கு கவர்ந்துவரும் பூச்சிகளை, தத்துப்பூச்சிகளை கண்காணித்து அழித்துவிடவேண்டும்

விதைக்கும் முன் பருவம்:

 • நன்கு உழவு செய்தால் பூச்சி மற்றும் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்
 • ஒரே நேரத்தில் விதைக்க வேண்டும்
 • சரியான விதைஅளவு தேர்வு செய்ய வேண்டும்
 • எதிர்த்து மற்றும் தாங்கி வளரக்கூடிய இரகங்கள் தேர்வு செய்ய வேண்டும்
 • சரியான நேரத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்
 • ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ விதைக்கு கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
 • உயிர் உரங்களாகிய அசோஸ்பைரஜல்லம், மற்றும் பாஸ்போபேக்டிரியா பயன்படுத்தலாம்
 • பாக்டீரிய இலைப்புள்ளி நோய்க்கு அக்ரிமைசின் - 100 (அ) ஸ்டெரெப்டோசைக்லின் 0.05 சதவிதம் 30 நிமிடம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்

காய்க்கும் பருவம்:

 • காய்பிடிக்கும் பருவத்தில் ஜின்க் பாஸ்பைட் 2 சதவிதம் வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம் அல்லது புரோமோடலலோன் 0.005 சதவிதம் எடுத்து விதைப் பருவத்தில் வைத்து எசிகளைக் கட்டுப்படுத்தலாம்

பாதுகாத்தல்:

 • களத்தில் பயிர் முதிர்ந்த உடனே பயிரை அறுவடை செய்யலாம்
 • அறுவடை தாமதிப்பதை தவிர்க்க வேண்டும்
 • அறுவடை செய்தவுடன் விதைகளை நன்கு காய வைத்து 8 - 10 சதவிதம் ஈரப்பதத்தினை பேணி காக்க வேண்டும்
 • நன்கு காய்ந்த விதைகளை மூடப்பட்ட கொள்கலன்களில் பாதுகாக்க வேண்டும்
 • மூடப்பட்ட கொள்கலன்களை தண்ணீர், எலிகள் மற்றும் நச்சுயிர் தாக்குதலை இல்லாதவாறு பாதுகாக்க வேண்டும்
 • விதையைச் சுற்றி நன்கு காற்றோட்டம் உள்ளதா என சரிபார்த்தல் வேண்டும்
 • அறுவடை செய்த பிறகு நன்கு உழுதுவிட வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015