| துவரை : பூச்சி  மற்றும் நோய்களை கண்காணித்தல்:  
                
                  முதலில்  வாரம் ஒருமுறை ஒவ்வொரு 10 கி.மி தூரத்திற்கு பூச்சியின் தாக்குதலை கண்காணிக்க வேண்டும்  பின்பு 10 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும் அந்த  பகுதியில் உள்ள இடங்களில் காய் துளைப்பானின் தாக்குதல் இருந்தால் பதிவு செய்ய வேண்டும் பொருளாதார  சேத நிலையை அறிய விவசாயிகளும், விரிவாக்க அமைப்புகளும் பூச்சிகள் மற்றும் உயிரியல்  கட்டுப்பாட்டு காரணிகள் இருப்பதை கண்காணிக்க வேண்டும் வயலில்  இரண்டு மணிநேரம் விளக்குப்பொறி வைத்து வெளிச்சத்துக்கு உட்படுத்தவேண்டும், முடிந்தால்  மாலையில் 8 - 8.30 மணி வரைக்கும் வைக்க வேண்டும் வரப்புகளில்  சோயாமொச்சை அல்லது தட்டைப்பயிரை மூடுபயிராக பயிரிடலாம் ட்ரைக்கோடெர்மா  ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற கணக்கில் விதைநேர்த்தி செய்யலாம் கார்பெண்டாசிம்  + திரம் (1:2 கிராம் விகிதம்) அல்லது கார்பெண்டாசிம் 2 கிராம் / கிலோ விதைக்கு எடுத்து  விதை நேர்த்தி செய்யலாம் மெடலாக்சில்  விதை நேர்த்தி செய்து பைட்டோப்த்தோரா அழுகல்நோயை கட்டுப்படுத்தலாம் கார்போபியூரான்  8 கிலோ / எக்டர் எடுத்து மண்ணில் கலக்கலாம்  பயிர்  வளரும் பருவம்:  
                
                  ஊடு  சாகுபடி மற்றும் கையால் களை எடுத்து 6 - 8 வாரம் வரை களைகளை கட்டுப்படுத்தலாம் சிறய  இடங்களில் புழுக்களை கையால் பிடித்தும், துணியை விரித்து செடியை ஆட்டிப் பிடித்தும்  கட்டுப்படுத்தலாம் பறவை  தகங்கிகளை வைத்து புழுக்களை உண்ண வைக்கலாம்  பூக்கும்  பருவம்:  
                
                  தேமல்  நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களை பிடுங்கி அழித்துவிட வேண்டும் சிறிய  இடங்களில் புழுக்களை கையால் பிடித்தும், துணியை விரித்தும் செடியை ஆட்டிப் பிடித்தும்  கட்டுப்படுத்தலாம் சிலந்திகள்  மற்றும் குழவிகளை பாதுகாக்கலாம் பறவை  தாங்கிகளை வைத்து புழுக்களை உண்ண வைக்கலாம்இனக்கவர்ச்சிப்பொறிகளை  50 மீட்டர் இடைவெளிவிட்டு எக்டர்க்கு 5 என்ற கணக்கில் வைக்க வேண்டும்ஹெலிக்கோவெர்பா  கவர்ச்சியூக்கியை பயன்படுத்தலாம், 20 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். கவர்ந்த  பூச்சிகளை தினமும் எடுத்து அழிக்க வேண்டும்   விதைக்கும்  முன் பருவம்:  
                
                  வேப்பம்  புண்ணாக்கு அல்லது தொழுஉரம் இடவும் கிராமத்திலும்  அதை சுற்றி உள்ள இடங்களிலும் ஒரே இரகத்தை பயிர் செய்ய வேண்டும் ஹிலிக்கோவெர்பா,  வாடல் நோய், மற்றும் நூற்புழு தாக்குதலை குறைப்பதற்கு சோளத்தை ஊடு பயிர் விட வேண்டும் எதிர்த்து  அல்லது தாங்கி வளரக்கூடிய இரகங்களை பயிர்செய்யலாம் முன்னரே  முதிர்ச்சியாகும் இரகங்களை தேர்வு செய்ய வேண்டும் இயற்கை  உதிரிகளைப் பாதுகாக்க ஆமணக்கு அல்லது வளர்த்தியான சோளம் அல்லது மக்காச்சோளம் இரகங்களை  பயிரிடலாம். இந்த இரகங்கள் பறவை தாங்கிகளாகவும் செயல்படும் குட்டை  ரக பயிர்களாகிய தட்டைப்பயிர், கொத்தவரை, அவரை, சோயாமொச்சை ஆகியவற்றை 8 - 10 வரிசை  கழித்து பயிரிடலாம்   விதைக்கும்  பருவம்:  
                
                  களத்தில்  பார்க்கும்பொழுது வாடல், அழுகல் நோய் 20 சதவிதத்திற்கு மேல் காணப்பட்டால் துவரை மறுமுறை  போடுவதை தவிர்க்கவும் மரிக்கொழுந்தை  ஊடுபயிராக போட்டு கவர்ச்சி பயிராக வளர்க்கலாம். பூக்கள் புழுக்களை முட்டையிடுவதற்கு  கவரும், முட்டையிட்டபின் அதை சேகரித்து அழித்துவிடலாம்என்.பி.வி  250 எல்.இ/எக்டர் தெளிக்கலாம்(முட்டைகள் மற்றும் முதல் பருவ புழுக்கள் இருந்தால் மட்டும்)பி.டி  0.07 - 1 கிலோ / எக்டர் தெளிக்கலாம் வேப்பம்கொட்டை  சாற்றை 5 சதவிதம் எடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை 3 தடவை தெளிக்கலாம் மோனோகுரோட்டோபாஸ் 1 மி.லி / லிட்டர் நீரில் (அ) குளோர்பைரிபாஸ்  3.5 மி.லி / லிட்டர் நீரில் (அ) கலந்து தெளிக்கவும்  காய்க்கும்  பருவம்:  
                
                  ஹெலிக்கோபெர்பா  ஆர்மிஜெரா என்.பி.வி 250 எல்.இ/எக்டர் தெளிக்கவும் மோனோகுரோட்டோபாஸ் 1 மி.லி / லிட்டர் நீரில் (அ) குளோர்பைரிபாஸ்  3.5 மி.லி / லிட்டர் நீரில் (அ) கலந்து தெளிக்கவும்  பாதுகாத்தல்  / சேமிப்பு:  
                
                  சரியான  பருவத்தில் அறுவடை செய்யவும்  |