முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: பருத்தி

பருத்தி :

பூச்சி மற்றும் நோய் கண்காணித்தல்:

 • சமுதாயத்தில் உள்ள அனைவரும் பூச்சியின் எண்ணிக்கையைக் கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்
 • அடிக்கடி ஒவ்வொரு 10 நாட்களுக்கும் பூச்சியின் தாக்குதல் மற்றும் எண்ணிக்கையைக் கண்காணித்து உயிரியல் கட்டுப்பாடு காரணிகளின் திறன்களை மதிப்பீடு செய்யலாம்
 • ஒவ்வொரு 5லிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் எக்டர்க்கு 10 இடங்களில் ஒரு இடத்திற்கு 5 தாவரங்களை தேர்வு செய்து பூச்சிகளை கண்காணிக்க வேண்டும்
 • இனக்கவர்ச்சிப்பொறி எக்டர்க்கு 5 வைத்து அமெரிக்கன் புழு, புள்ளி மற்றும் இளஞ்சிவப்புகாய்புழு ஆகியவற்றை கண்ணகாணிக்க பொறிகளை 50 மீட்டர் தூரத்தில் வைக்கலாம்
 • எக்டர்க்கு 25 மஞ்சள் வர்ன ஒட்டுப் பொறி வைத்து வெள்ளை ஈ யைக்கட்டுப்படுத்தலாம்
 • விதை நேர்த்த செய்தது பயிரை பாதுகாக்கத் தவரினால் தாவரப்பூச்சிகொல்லிகளை தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படத்தலாம்
 • பொறியில் கவர்ந்த பூச்சியின் எண்ணிக்கையை வைத்து ஒட்டுண்ணி மற்றும் இரைவிழுங்கியை இரண்டாம்முறை விடலாம்

விதைக்கும் முன் பருவம்:

 • கோடை உழவு நன்கு செய்ய வேண்டும்
 • மாற்றுப்பயிர்களை பிடுங்கிவிடவும்
 • பருத்தி மற்றும் பருத்தி பயிரிடுவதை தவிர்க்கவும்
 • பயிர்சுழற்சியைக் கடைப்பிடிக்கவும்
 • விதைப்பதற்கு முன்னால் அமிலம் கொண்டு பஞ்சு இழை நீக்கம் செய்யலாம் (கந்தக அமிலம் 0.1 லிட்டர் / கிலோ விதைக்கு) செல்பாஸ் 3 கிராம் / கனசதுரஅடி வில்லையைக் கொண்டு புகைபிறப்பித்து 2 நாட்களுக்கு வைக்கலாம். பின்பு நன்கு காற்றோட்டமாக்க வேண்டும்

 விதைக்கும் பருவம்:

 • தாங்கி அல்லது எதிர்த்து வரைக்குடிய இரகங்களை பயிரிடலாம்
 • சான்றிதலளிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்தவும்
 • விதைகளை அமிலம் கொண்டு பஞ்சு இழை நீக்கம் செய்யலாம்
 • முன்பே விதைக்கவும்
 • பூச்சிக்கொல்லிகளுடன் விதைநேர்த்தி செய்யவும்
 • முளைக்குமுன் களைக்கொல்லி / முளைந்த பின் களைக்கொல்லியைப் பயன்படுத்தவும்
 • சரியான அளவு இடைவெளிவிட்டும், பயிரின் எண்ணிக்கை சரியாகவும் இருக்கவேண்டும்
 • தழைச்சத்து அதிகம் கொண்ட உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம். தொழுஉரம் 25 டன்கள் / எக்டர்க்கு
 • குறைந்தது 8 - 9 வாரங்களுக்கு பயிரில் களை இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்
 • வெண்டை, ஆமணக்கு, மரிக்கொலுந்து, புகையிலை, ஆகியவற்றில் இந்தப் பயிரை கவர்ச்சிப்பயிராக வளர்த்து கவர்ந்த பூச்சிகளை அழிக்கலாம்
 • பச்சைப்பயிறு, சோயாமொச்சை, கேழ்வரகு, மக்காச்சோளம், மற்றும் வெங்காயம் ஆகியவற்றுடன் ஊடுபயிராகப்பேபடலாம்

பயிர் வளரும் பருவம்:

 • பயிர் வளராத இடத்தில் மறுபடி நடலாம் அதிகமாக இருக்கும் இடத்தில் பயிரின் அடர்த்தியைக் குறைக்கலாம்
 • கையால் களை எடுக்கலாம்
 • கிரைசோபெர்லா இரைவிழுங்கியை எக்டர்க்கு 1000 கணக்கில் விடலாம்
 • வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேப்பம் சார்ந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்
 • இனக்கவர்ச்சிப்பொறி எக்டர்க்கு 5 வைக்கலாம்
 • வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறியை வைக்கலாம்
 • வேர் அழுகல் நோய் தாக்கப்பட்ட பயிர்களை அழித்துவிடலாம்

பூக்கும் பருவம்:

 • கையால் களை எடுக்கலாம்
 • சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கிரைசோப்பெர்லாவை எக்டர்க்கு 10000 விடவும்
 • காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த ட்ரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி 1.5 லட்சம் / எக்டர் விடவும்
 • பறவை தாங்கிகளை வைக்கலாம்
 • வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறியை வைக்கலாம்
 • பரித்துரைக்கப்பட்ட மருந்துகளை கொண்டு நோயைப் பரவும் பூச்சிகளை அழிக்கலாம்

காய்க்கும் பருவம்:

 • தாக்கப்பட்ட பூக்களை அழித்துவிடவும்
 • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழித்துவிடவும்
 • ஹச். ஏ. என். பி. வி 250 - 500 எல்.கி / எக்டர்
 • வேப்பம் சார்ந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவும்
 • பயிர் காலத்தை நீடிக்க வேண்டாம்
 • சிலந்திகளைக் கட்டுப்படுத்த சிலந்திக்கொல்லியை பயன்படுத்தவும்

சேமிப்பு:

 • பயிர் முதிர்ந்தவுடன் அறுவடை செய்யவும். மறுதாம்புப்பயிர் வருவதைத் தவிர்க்கவும். அவ்வாறு செய்தால் மறுபடி பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்
 • வயலுக்கு அருகில் பருத்தி அறுவடை செய்தபின் பருத்தி குச்சிகளை அடுக்கி வைப்பதை தவிர்க்கவும். அடுக்குவதற்கு முன்னால் திறந்த பருத்தி காய்களை பிடுங்கிவிட வேண்டும்.
 • விதைகளை நச்சுப்புகையிட்டுப் பாதுகாக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015