ஒருங்கிணைந்த  பூச்சி மேலாண்மையின் முக்கிய அங்கங்கள் 
              
              உழவியல் முறைகள் : 
              
                - பாரம்பரிய  முறை  என்பது  வழக்கமான  பண்ணை  நடவடிக்கைகள்  மூலம்  பூச்சிகளை  கட்டுப்படுத்துவதாகும். அதாவது பூச்சிகளை  அழித்தல்  அல்லது  பொருளாதார  நட்டம்  ஏற்படாமல்  தடுத்தல்  ஆகியவை  ஆகும்.  பல்வேறு  வகையான  பாரம்பரிய  முறைகள்  வருமாறு.
 
                - நாற்றங்கால்  அமைத்தல்  அல்லது  முதன்மைப்  பண்ணையில்  பூச்சிகள்  இல்லாமல்  இருக்க  தாவர  குப்பைகளை  அகற்றுதல்,  அரும்புகளை  கத்தரித்தல்,  மண்ணை  பக்குவப்படுத்துதல் மற்றும்  கோடையில்  ஆழமாக  உழுவதன்  மூலம்  பல்வேறு  நிலைகளில்  பூச்சிகள்  அழிக்கப்படுகின்றன.  முறையான  வடிகால்  வசதி  அமைக்க  வேண்டும்.
 
                - ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை கண்டறிந்து  உரங்கள்  அளிப்பதற்கு  மண்  பரிசோதனை  செய்ய  வேண்டும்.
 
                - சுத்தமான  மற்றும்  சான்றளிக்கப்பட்ட விதைகளை  தேர்ந்தெடுக்க வேண்டும்  மற்றும்  விதை  மூலம்  பரவும்  நோயைத்  தடுக்க  பூஞ்சானக்  கொல்லி  மற்றும்  உயிர்ம  பூச்சிக்  கொல்லிகளின்  மூலம்  சிகிச்சை  அளிக்க  வேண்டும்.
 
                - நோய்  எதிர்ப்பு  சக்தி  கொண்ட  விதைகள்  நோய்  கட்டுப்பாட்டில் முக்கிய  பங்கு  வகிக்கின்றன.
 
                - விதைப்பு  மற்றும்  அறுவடை  நேரத்தை  சரிசெய்வதன்  மூலம்  உச்ச  பருவ  பூச்சி  தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
 
                - சாராத்  தாவரங்களை  பயிர்  சுழற்சி  மூலம்  பயிரிடுவதால்  மண்ணின்  மூலம்  பரவும்  நோய்களைத்  தடுக்கலாம்.
 
                - முறையான  பயிர்  இடைவெளியின்  மூலம்  ஆரோக்கியமான  பயிர்கள்  பெற  முடியும்  மற்றும்  நோய்  பயிர்கள்  இலக்காவது  குறைகிறது.
 
                - உகந்த  உரங்களைப்  பயன்படுத்த  வேண்டும்.  தொழு  உரம்  மற்றும்  உயிரி  உரங்கள்  ஊக்குவிக்கப்படுகின்றன.
 
                - முறையான  நீர்  மேலாண்மை  (ஈரப்பதம்  மற்றும்  காய்ந்தும்  வைத்திருக்க  வேண்டும்)  அப்பொழுதுதான் நீர்த்  தேக்கம்  ஏற்படாமல்  தடுக்க  முடியும்.  நீண்ட  காலம்  மண்ணில்  ஈரப்பதம்  அதிகமாக  இருந்தால்  அவை  பூச்சிகள்  வளர்ச்சிக்கு  உகந்ததாக  உள்ளது  . குறிப்பாக  மண்  மூலம்  பரவும்  நோய்களுக்கு  ஏற்றதாக  இருக்கும்.
 
                - முறையான  களை  மேலாண்மை.  களைகள்  பயிர்களோடு  சேர்ந்து  நுண்ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும்.  அதனால்  ஊட்டச்சத்து  முழுமையாக  பயிர்களுக்கு  கிடைப்பதில்லை மற்றும்  களைகள்  பூச்சிகள்  தங்குமிடங்களாக உள்ளன.
 
                - வெள்ளை  ஈக்கள்  மற்றும்  பூச்சிகளைப்  பிடிக்க  மஞ்சள்  தட்டுப்  பொறியை  கூரை  உயரத்திற்கு  மேலே  வைக்க  வேண்டும்.
 
                - ஒரே  சமயத்தில்  விதைக்க  வேண்டும்.  பெரிய  பரப்பளவில்  ஒரே  சமயத்தில்  விதைக்கும்  பொழுது  பூச்சிகளுக்கு இனப்பெருக்கம் செய்ய  பல்வேறு  நிலைகளில்  பயிர்கள்  கிடைப்பதில்லை மற்றும்  நோய்த்  தொற்று  தென்பட்டால்  முழு  பகுதியிலும்  கட்டுப்பாட்டு வழிமுறைகளை  திறம்பட  செயல்படுத்த  முடியும்.
 
                - சில  பயிர்கள்  பூச்சி  இனங்களை  கவர்ந்திழுக்கின்றன.  அவை  பொறி  பயிர்கள்  எனப்படுகின்றன.  வயலின்  ஓரங்களில்  இந்தப்  பயிர்கள்  வளரும்பொழுது பூச்சிகள்  அதிகரிக்கும்.  இவற்றை  பூச்சிக்  கொல்லிகள்  அல்லது  இயற்கை  எதிரிகளை  உருவாக்கி  கட்டுப்படுத்த வேண்டும்.
 
                - பூச்சிகளால்  பாதிக்கப்பட்ட இடத்தில்  வேர்  நனைத்தல்  அல்லது  நாற்று  சிகிச்சை  அளிக்க  வேண்டும்.
 
                - ஊடுபயிர்  அல்லது  கலப்புப்  பயிரை  எங்கெல்லாம்  முடியுமோ  அங்கெல்லாம்  விதைக்க  வேண்டும்.  சில  பயிர்கள்  பூச்சி  விரட்டியாக  செயல்படுகின்றன.
 
                - அறுவடை  நிலமட்டத்திற்கு மிக  அருகில்  இருக்க  வேண்டும்.  ஏனெனில்  சில  பூச்சிகள்  குறிப்பிட்ட  வளர்ச்சி  நிலையில்  மூல  நுண்ணுயிராக  அடுத்த  பயிர்  பருவத்திற்காக  தாவரத்திலேயே  தங்கிவிடும்.  எனவே  நிலத்தடி  மட்டத்தில்  அறுவடை  செய்தால்  அடுத்த  பருவத்தில்  பூச்சிகள்  குறையும்.
 
                - நடவு  செய்வதற்கு  முன்,  நாற்றுக்களை  மண்  மூலம்  பரவும்  நோய்களிலிருந்து காக்க  தாமிர  பூசணக்  கொல்லி  அல்லது  உயிரினப்  பூச்சிக்  கொல்லி  கரைசலில்  மூழ்கச்  செய்ய  வேண்டும்  அல்லது  தெளிக்க  வேண்டும்.
 
                - பழ  மரங்களை  கவாத்து  செய்யும்பொழுது,  நெரிசலான  / இறந்த  / உடைந்த  / நோயுற்ற  கிளைகளை  அழித்துவிட  வேண்டும்.  பூச்சி  தொற்று  ஆதாரமாக  செயல்படும்  இவற்றை  பழத்  தோட்டத்தில்  குவித்து  வைக்கக்  கூடாது.
 
                - பயிர்களை  பூச்சியில்  இருந்து  பாதுகாக்க  கவாத்து  செய்த  பகுதியில்  போர்டிக்ஸ்  விழுது  / பெயிண்ட்  கொண்டு  மூட  வேண்டும்.
 
                - காய்  நன்றாக  பிடிப்பதற்கு  தோட்டத்தில்  மரங்களை  குறிப்பிட்ட  இடைவெளியில்  நட  வேண்டும்.
 
                - தேன்  கூடு  மற்றும்  பூங்கொத்து  வைப்பதன்  மூலம்  மகரந்த  சேர்க்கை  மற்றும்  காய்  படித்தல்  அதிகரிக்கலாம்.
 
               
              மேலே 
              ஒழுங்கு  நடைமுறைகள் : 
                இந்த செயல்பாட்டில்,  பாதிக்கப்பட்ட விதைகள்  அல்லது  செடிகள்  நாட்டிற்குள்  நுழையவோ  அல்லது  நாட்டிற்குள்  ஓரிடத்திலிருந்து மற்ற  இடத்திற்கு  கொண்டு  செல்ல  கூடாது  என்று  அரசு  ஒழங்கு  முறை  விதிகளை  கட்டமைத்துள்ளது.
               மேலே 
              இயந்திர  முறைகள்
              
                - முட்டைத்  திரள்,  புழுக்கள்,  பூச்சிக்  கூடு  மற்றும்  பூச்சிகள்  ஆகியவற்றை  நீக்கி  அழித்துவிட  வேண்டும்.  மேலும்  முடிந்தவரை  நோய்  தாக்கப்பட்ட  தாவரத்தின்  பகுதிகளை  நீக்கிவிட  வேண்டும்.
 
                - மூங்கில்  குகைகளை  உருவாக்குதல்  அல்லது  பறவைகள்  உட்காருமிடங்களை உருவாக்கி  இயற்கை  எதிரிகளைக்  கொண்டு  பூச்சிகளைக்  கட்டுப்படுத்தலாம்.
 
                - ஒளி  பொறிகள்  மூலம்  பூச்சிகளைப்  பிடித்து  அழித்துவிட  வேண்டும்.
 
                - கயறு  பயன்படுத்தி  இலை  உண்ணும்  புழுக்களை  பிடித்து  அளிக்க  வேண்டும்.  உதாரணமாக  கூட்டுப்  புழு  மற்றும்  இலை  மடக்குப்  புழு.
 
                - எங்கெங்கு  தேவைப்படுகிறதோ அங்கெல்லாம்  பறவை  விரட்டியை  நிறுவ  வேண்டும்.
 
                - பறவை  உட்காரும்  இடங்களை  நிறுவுவதன்  மூலம்  பறவைகள்  உட்கார்ந்து  முதிர்ச்சியடையாத பூச்சிகளை  உண்ணும்.  உதாரணமாக  முட்டைகள்,  புழுக்கள்,  பூச்சிக்  கூடு.
 
                - பேரோமோனஸ்  உபயோகித்து  பூச்சிகளின்  இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
 
                - பேரோமோன்  பொறிகளை  பயன்படுத்தி  பூச்சிகளை  கண்காணித்து  அவற்றை  ஒடுக்கலாம்.
 
               
              மேலே 
              மரபு  சார்ந்த முறைகள் 
              
                - பல்வேறு  பயிர்களில்  அதிக  உற்பத்தியளிக்கும் பயிர்களை  தேர்வு  செய்ய  வேண்டும்.
 
                - பூச்சி  எதிர்ப்பு  திறன்  கொண்ட  அல்லது  தாங்கக்கூடிய  இரகங்களை  தேர்வு  செய்ய  வேண்டும்.
 
                - மரபணு  மாற்றப்பட்ட  விதைகளை  பயன்படுத்தலாம்.  உதாரணம்  : B.T.பருத்தி
 
                - செழுமையான  ஆண்  பூச்சிகளுடன்  போட்டியிட  மலட்டு  ஆண்  பூச்சிகள்  களத்தில்  விடப்படுகின்றன.  ஆண்  பூச்சிகளில்  மலட்டுத்  தன்மையை  உருவாக்க  பரிசோதனைக்  கூடங்களில்  கெமோஸ்டெர்லியன்ட்ஸ் அல்லது கதிர்வீச்சு  பயன்படுத்தப்படுகிறது.
 
               
              மேலே 
              உயிரியல்  முறைகள் 
              உயிரியல் முறையில்  பூச்சிகள்  மற்றும்  நோய்களைக்  கட்டுப்படுத்துவது ஒருங்கிணைந்த  பூச்சி  மேலாண்மையின்  முக்கிய  அங்கமாகும்.  இதன்  பொருள்  உயிர்ம  கட்டுப்பாடு  என்பது  வாழும்  உயிரினங்களைப் பயன்படுத்தி  தேவையற்ற  (பூச்சிகள்)  வாழும்  உயிரினங்களை  கட்டுப்படுத்துவதாகும். வேறுவிதமாக கூறினால்  பூச்சிகளை  உண்ணும்  பிராணிகள்  அல்லது  பூச்சிக்  கொல்லிகள்  பயன்படுத்தி  பூச்சிகளைக்  குறைக்கலாம்  அல்லது  புதிய  உயரி  கொல்லிகளை  பயன்படுத்தலாம் அல்லது  ஏற்கனவே  செயலாற்றிக்  கொண்டிருந்ததை அதிகரிக்கலாம். 
              பூச்சியின  ஒட்டுண்ணி : 
              இந்த உயிரினங்கள்  தங்கியிருக்கும் பூச்சிகளின்  மேல்  முட்டைகளை  இடுகின்றன.  இதன்  வாழ்க்கை  சுழற்சி  முடிவதற்குள்  அந்த  உயிர்  இறந்துவிடும்.  உதாரணமாக  முட்டை,  இளம்புழு,  கூட்டுப்புழு,  முதிர்ந்த  பூச்சி,  முட்டை  இளவுயிரி  ஒட்டுண்ணி. 
              கொன்றுண்ணி  : 
                இவை மற்ற  உயிரிகளை  உணவாகக்  கொள்ளும்  உயிரினங்களாகும்.  உதாரணமாக  பல்வேறு  சிலந்தி  இனங்கள்,  டிராகன்  ஈக்கள்,  தம்பலப்  பூச்சிகள்,  பறவைகள்  ஆகியவை. 
                 
                நோய்க்  காரணி : 
              இவை நோய்  விளைவிக்கும்  நுண்ணுயிரிகள்.  இவை  பயிரைத்  தாக்கும்  பூச்சிகளுக்கு நோய்  உண்டாக்குகின்றன.  முக்கிய  நுண்  கிருமிகள்  பூஞ்சை,  வைரஸ்  மற்றும்  பாக்டீரியா.  சில  நூற்புழுக்களும் பூச்சிகளுக்கு நோய்  விளைவிக்கின்றன.  ஹிர்கோடெல்லா,  பூவேரியா,  நோமுரே  மற்றும்  மெட்டாரைஸியம் போன்ற  பூஞ்சான  இனங்கள்  அதிக  எண்ணிக்கையிலான பூச்சிகளைக்  (90% பூச்சிகள்) கொல்கின்றன. வைரஸ்களில் முக்கியமானவை  நியூக்ளியர்  பாலிஹைட்ரோசிஸ் வைரஸ்  (NPV) மற்றும்  கிரேனலோசிஸ்  ஆகியவை.  இலைப்புழு,  இலை  மடக்குப்  புழு,  கம்பளிப்  புழு  மற்றும்  தத்துப்  பூச்சிகளை  வைரஸ்கள்  கொல்கின்றன.  பாக்டீரியாவில் பேசிலஸ்  துருன்சியன்சிஸ்,   பேசிலஸ் பாபில்லோ  போன்றவை  பொதுவான  உதாரணமாகும்.  
              உயிரியல்  கட்டுப்பாட்டு முறைகள் : 
              நோயை உண்டாக்கும்  பூச்சிகளை  குறைந்த  செலவில்  ஆய்வகத்தில்  ஆராய்ந்து  திரவம்  அல்லது  தூள்  தாயரித்து  இரசாயன  பூச்சிக்  கொல்லிகளைத்  தெளிப்பது  போன்றே  தெளிக்கலாம்.  இவை  உயிரினப்  பூச்சிக்  கொல்லிகள்  எனப்படுகிறது.  பல  உயிரினப்  பூச்சிக்  கொல்லி  முறைகள்  கீழே  கொடுக்கப்பட்டுள்ளன. 
              
              இந்த முறையில், புதிய  உயிர்கொல்லி  இனங்களை  ஆதார  உயிரிக்கு  எதிராக  உருவாக்குதல்  ஆகும்.  இவை  ஆய்வகத்தில்  முற்றிலுமாக  ஆராயப்பட்டு  பின்  பலனை  அடைய  விளை  நிலத்தில்  சோதனை  செய்யப்படுகின்றன. 
              
              இந்த முறையில், இயற்கை  எதிரிகளின்  எண்ணிக்கையை  அதிகரித்தல்  அல்லது  ஆய்வகங்களில்  வளர்த்த  அல்லது  விளை  நிலங்களில்  சேகரித்த  உயிர்  கொல்லிகளைக்  கொண்டு  நோய்ப்  பூச்சிகளின்  எண்ணிக்கையை  குறைப்பதாகும். 
              
              இது உயிரியல்  கட்டுப்பாட்டில் முக்கிய  பங்கு  வகிக்கிறது  மற்றும்  இது  பூச்சிகளை  அழிப்பதில்  முக்கிய  பங்கு  வகிக்கிறது.  இந்த  செயல்முறை  இயற்கை  எதிரிகள்  அழிவதிலிருந்து பாதுகாக்கிறது.  இயற்கை  எதிரிகளை  பாதுகாக்க  பல்வேறு  நடைமுறைகள்  கீழே  கொடுக்கப்பட்டுள்ளன. 
              
                - பூச்சி  ஒட்டுண்ணியின் முட்டைகளை  சேகரித்து  மூங்கில்  குகை  அல்லது  பறவை  உட்காரும்  இடங்களில்  வைத்து  புழுக்களை  அழிக்கலாம்.
 
                - விவசாயிகளுக்கு பூச்சிகள்  மற்றும்  அவற்றை  எதிர்க்கும்  எதிரிகளை  வேறுபடுத்திப் பார்க்க  வானொலி  அல்லது  தொலைக்காட்சி வழியாக  வகுப்புகள்  நடத்த  வேண்டும்  மற்றும்  பூச்சிக்  கொல்லி  தெளிக்கும்பொழுது இயற்கை  எதிரிகளைப்  பாதுகாக்க  வேண்டும்.
 
                - இரசாயனத்  தெளிப்பை  பொருளாதார  நட்டம்  ஏற்படும்பொழுது கடைசியாக  பயன்படுத்த  வேண்டும்.
 
                - பரந்த  அளவிலான  பூச்சிக்கொல்லி பயன்பாட்டை  தவிர்க்க  வேண்டும்.
 
                - தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும்  ஓப்பீட்டளவில் சுற்றுச்  சூழல்  நட்பு  (REF) பூச்சிக்கொல்லிகளை மட்டுமே  பயன்படுத்த  வேண்டும்.
 
                - பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மட்டுமே  பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவும்.
 
                - விதைப்பு  நேரம்  மற்றும்  அறுவடை  நேரத்தை  சரிசெய்வதன்  மூலம்  நோய்  தாக்கும்  உச்ச  பருவத்தை  தவிர்க்கலாம்.
 
                - கவர்ச்சிப்  பயிர்களை  விளைநிலத்தின் ஓரத்தில்  பயிர்  நடவுக்கு  முன்பாக  நடவு  செய்து  பூச்சிகளை  பிடிக்கலாம்  மற்றும்  இயற்கை  எதிரிகளை  அதிகரிக்கலாம்.
 
                - வேர்  நனைத்தல்  /  நாற்றங்கால் சிகிச்சை  மூலம்  ஆனைக்  கொம்பன்  ஈயை  அழிக்கலாம்.
 
                - பயிர்  சுழற்சி  மற்றும்  ஊடுபயிர்  மூலமாகவும்  இயற்கை  எதிரிகளை  பாதுகாக்கலாம்.
 
                - பரிந்துரைக்கப்பட்ட அளவு  மற்றும்  விகிதத்தில்  பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த  வேண்டும்.
 
               
              மேலே 
              இரசாயன  முறைகள் : 
              நோய்ப் பூச்சிகள்  பொருளாதாரை  இழப்பை  ஏற்படுத்தும்பொழுது மற்ற  எல்லா  முறைகளும்  செயலிழந்துவிட்டால் கடைசி  அஸ்திரமாக  இரசாயன  பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கலாம்.  பூச்சி  மேலாண்மை  ஆராய்ச்சியில் முன்னேற்றம்  கண்டிருந்தாலும் பயிர்  பாதுகாப்பில்  பூச்சி  பிரச்சனைகளை  சமாளிப்பதில்  பூச்சிக்  கொல்லிகள்  முக்கிய  பங்கு  வகிக்கின்றன.  எனவே  பூச்சிக்கொல்லியின் தேவை  அடிப்படையானது.  பூச்சி  நோய்க்  கண்காணிப்பு  செலவு  மட்டும்  சார்ந்ததல்ல.  அதன்  தொடர்புடைய  பிரச்சனைகளையும் குறைக்க  உதவுகிறது.  இரசாயன  கட்டுப்பாட்டை பின்பற்றும்பொழுது நாம்  என்ன  தெளிக்க  வேண்டும்,  எப்பொழுது  தெளிக்க  வேண்டும்,  எங்கே  தெளிக்க  வேண்டும்  மற்றும்  எப்படித்  தெளிக்க  வேண்டும்  என்பதை  நினைவில்  கொள்ள  வேண்டும். 
              
                - பொருளாதார  வாயில்  நிலை  மற்றும்  நோய்  எதிரிகளின்  விகிதம்  ஆகியவற்றைக்  கண்காணிக்க  வேண்டும்.
 
                - மிகவும்  பாதுகாப்பான  பூச்சிக்கொல்லிகளை தேர்வு  செய்ய  வேண்டும்.  உதாரணமாக  வேம்பு  மற்றும்  உயிரினப்  பூச்சிக்கொல்லிகள்.
 
                - பூச்சிகள்  கீற்றுகளாகவோ அல்லது  தனிப்பட்ட  திட்டுகளாகவோ காணப்பட்டால்  முழு  விளை  நிலத்திலும்  தெளிக்கப்பட  வேண்டும்.
 
               
                        ஒருங்கிணைந்த பூச்சி  மேலாண்மை  காய்கறி  மற்றும்  பழப்பயிர்களுக்கு முக்கியம்.  ஏனெனில்  இவை  மனிதர்களால்  நுகரப்படுகின்றன.  பூச்சிக்கொல்லிகள் பொதுவாக  நச்சுத்  தன்மை  வாய்ந்தவை  மற்றும்  இந்த  நச்சை  கைகளால்  கையாள  பரிந்துரைக்கப்படுவதில்லை. அதிக இலாபம் அடைய, விவசாயிகள்  பூச்சிக்கொல்லியின் காலம்  முடியும்  வரை  பொறுத்திருப்பதில்லை.  பயிர்களை  அறுவடை  செய்து  உடனே  சந்தைப்படுத்துகின்றனர். இதனால் பூச்சிக்கொல்லிகள்  விஷமாகின்றன.  நாட்பட்ட  விளைவுகள்,  சில  நேரங்களில்  இறப்பும்  ஏற்படுகிறது.  இதனால்  இரசாயன  கட்டுப்பாட்டு முறையை  பயிர்களில்  நடைமுறைப்படுத்தும்பொழுது மிகுந்த கவனமாகவும்  எச்சரிக்கையாகவும் இருக்க  வேண்டும். 
            மேலே 
             |