முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை : : கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை

பூச்சி மற்றும் சோய்களை கண்காணித்தல்:

 • பூச்சியின் வளத்தையும், பகிர்மானத்தையும் மாற்ற சமுதாய நிலை கண்காணிப்பு வேண்டும்
 • 10 நாட்களுக்கு ஒருமுறை உயிரியல் கட்டுப்பாட்டின் திறனையும் பூச்சியின் நடமாட்டத்தையும் கண்காணிக்கவேண்டும்
 • பூச்சியின் தாக்குதலை ஒவ்வொரு 5 - 10 கி.மி தொலைவில் எக்டர்க்கு 12 இடங்களில், ஒரு இடத்துக்கு 5 தாவரங்கள் என்ற எண்ணிக்கையில் பதிவு செய்யவேண்டும்
 • இனக்கவர்ச்சிப்பொறி வைத்து பயிறு காய்ப்புழுவை கண்காணிக்கலாம் 50 மீட்டர் இடைவெளியில் எக்டர்க்கு 5 பொறிகள் என்ற வீதம் இனக்கவர்ச்சிப்பொறி ஒவ்வொரு பூச்சிகளுக்கும் அமைக்கலாம்
 • ஒவ்வொரு பூச்சி இன வகைகளுக்கும் தனித்தனியே கவர்ச்சிப்பொறிகளை வைத்து பூச்சிகளை தினமும் சேகரித்து அழிக்கவேண்டும் கவர்ச்சிப்பூச்சிகளை 15 -20 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்

விதைக்கு முன் பருவம்:

 • கோடையில் ஆழ் உழவு செய்ய வேண்டும்
 • நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்
 • ஒரு கிராமத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இரகத்தை ஒரே நேரத்தில் விதைக்க வேண்டும்
 • மண்ணில் சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பாலிதீன் நிலப்போர்வையிட்டு 15 நாட்களுக்கு ஒளி ஊடுருவ வேண்டும்
 • பயிர் தாள்களை அகற்ற வேண்டும்
 • மிகாத்தமல்லி / கடுகு / கோதுமை / சோளம்(ரபி) ஆகிய பயிர்களைக் கொண்டு ஊடுபயிரிடலாம்
 • அக்டோபர் மாத தொடக்கத்தில் நடவு செய்யலாம் ஏனென்றால் ஹெலிக்கோவென்பா ஆர்மிஜெராவின் தாக்கத்திலிருந்து தப்பித்துவிடலாம்
 • மரிக்கொலுந்தை கவர்ச்சிப் பயிராக நூற்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்
 • எதிர்த்து அல்லது தாங்கி வளரக்கூடிய இரகங்களை பயிரிடலாம்

விதைக்கும் பருவம்:

 • 190 கிலோ விதையில் 200 கிராம் ரைசோபியம் கலந்து விதைக்க வேண்டும்
 • தாவரங்களின் எண்ணிக்கை அடர்த்தியாக இருந்தால் குறைக்கவேண்டும்
 • ட்ரைக்கோடெர்மா 4 கிராம் / கிலோ விதைக்கு கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்
 • கார்பெண்டாசிம் 25 சதவிதம் எடுத்து விதையுடன் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
 • நிலம் தயார் செய்தல், சரியான விதை விகிதம் மற்றும் நிலையான உரம் ஆகிய பரிந்துரைக்கப்பட்ட உழவியல் நுட்பங்களை கையாளுதல் வேண்டும்

தாவரம் வளரும் பருவம்:

 • இடை உழவு மற்றும் களைகளை எடுத்து 6 முதல் 8 வாரங்களுக்கு களையில்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும்
 • பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த நுனி கிள்ளுதல் / கொளுந்து ஒடித்தல் வேண்டும்
 • தென் மாநிலங்களில் பயிர் காலம் முழுவதும் காய்துளைப்பானை கண்காணிக்க வேண்டும்
 • இரைவிழுங்கி குளவிகள், சிலந்திகள், ஒட்டண்ணிகளை பாதுகாக்க வேண்டும்

பூக்கும் பருவம்:

 • என்.பி.வி 250 எல்.இ (அல்லது) பி.டி வகை குர்ஸ்டாகி 1 கிலோ / எக்டர் அல்லது வேப்பம் புண்ணாக்கு 5 சதவிதம் அல்லது வேப்பம் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம்
 • பரிந்துரைக்கப்படாத அல்லது அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்தால் இரைவிழுங்கிகளாகிய சிலந்திகள், கிரைசோபா மற்றும் இதர இயற்கை எதிரிகளை பாதுகாக்கலாம்
 • பறவை தாங்கிகளை வைத்தால் பறவைகள் புழுக்களை உண்ணும்
 • மோனோகுரோட்டோபாஸ் 0.04 சதவிதம் அல்லது குளோர்பைரிபாஸ் 0.05 சதவிதம் அல்லது புரபினோபாஸ் 4 மில்லி தெளிக்கவும்.

காய்க்கும் பருவம்:

 • பூக்கும் பருவத்தில் காண்க


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015