போபரிடிஸ் குலை அழுகல் அல்லது திராட்சையின் சாம்பல் பூசணம்: போட்ரிடிஸ் சினேரியா  
                 
                அறிகுறிகள்: 
                - தாக்கப்பட்ட பழங்கள் முதலில் மென்மையாகவும்,  நீர் போன்றும் காணப்படும்.
 
                - தாக்கப்பட்ட வெள்ளைப் பயிர்வகை பழங்கள்  பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடும்
 
                - ஊதா நிறப் பயிர் வகைகள் ஆழ்ந்த சிவப்பு  நிறத்தை உருவாக்கும். 
 
                - ஆரோக்யமான பழங்கள் நோய் தாக்கப்பட்ட  பழங்களின் மேல் உரசினால் அந்தப் பழங்களும் பாதிக்கப்படும்.
 
                - அழுகிய பழங்கள் கெட்டியாக காய்ந்து கீழே  விழுந்து விடும்.
 
               
              கட்டுப்பாடு: 
                - மழைக் காலங்களுக்கு முன் ஒரு மாத கால  இடைவெளியில் 0.2%  கேப்டான்னை மூன்று முறை தெளித்தால் அறுவடை முன் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 
                | 
              
              
              
                  | 
               
              
                | போபரிடிஸ் குலை அழுகல் | 
               
              |