சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
மருந்துக்கடை வண்டு (Drug store beetle) ஸ்டீகோபியம் பேனிசியம்

இவ்வண்டின் தாய்ப்பூச்சியும் புழுக்களும் மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி, பதப்படுத்தப்பட்ட (அல்லது) உலர்ந்த காய்கறிகள் மற்றும் விலங்கின உபப்பொருட்களைத் தாக்கி அழிக்கின்றன. இறக்கைப் பகுதியில் எட்டு பட்டைக்கோடுகள் காணப்படும். இவ்வண்டின் புழுக்கள் வெள்ளை நிறத்துடன் சதைப்பிடிப்புடன் இருக்கும். இதன் உடலில் அடிப்பாகத்தில் இரண்டு கருமையான முட்போன்ற அமைப்புகள் காணப்படும். இதன் வாழ்க்கைப் பருவம் 24 முதல் 42 நாட்களாகும்.

புழு வண்டு

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015