சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
பயறு வண்டு(Pulse beetle ) கலோஸோ புருகஸ் வகைகள்

இவ்வண்டு பயறு வகைகளை மட்டுமே தாக்கவல்லது. இவ்வண்டு 3 முதல் 4 மி.மீ. நீளமும் பழுப்பு நிறமும் உடையது. இறக்கையின் மேல் வெண்புள்ளிகள் காணப்படும். தாய்ப்பூச்சிகள் 100 முட்டைகளை தனித்தனியாக பயறுகளின் மேல் இடும் முட்டைகளிலிரந்து சிறிய புழுக்கள் தானியத்தை குடைந்து சென்று உட்பகுதியை உண்கின்றன. தாக்கப்பட்ட தானியத்தின் மேல்தோல் மட்டும் தனியாகக்காணப்படும். பல புழக்கள் தானியத்தில் நுழைந்தாலும் ஒரு புழுமட்டுமே தன் வாழ்க்கை சரிதத்தை முடித்தக்டகொள்கின்றது. இப்புழுக்கள் வளைந்து வெண் மஞ்சள் நிறமுடையதாகவும் வாய்ப்பகுதி கருப்பாகவும் இருக்கம். இவை 26 நாட்களில் கூட்டப்புழுக்களாகின்றன. சுமார் 10 நாட்களில் தாய்ப்பூச்சிகள் வெளிபடுகின்றன. இத்தாய்ப்பூச்சிகள் 12 நாட்கள் வரை உயிர்வாழ்கின்றன. இப்பூச்சியின் தாக்குதல் பயறுவகைகளின் அறுவடை சமயத்திலேயே ஆரம்பமாகின்றது.

முட்டை கூட்டுப்புழு முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015