சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
நெல் துளைக்கும் வண்டு (lesser gain borer) ரைஸோபெர்த்தா டொமினிகா

இப்பூச்சியால் தாக்கப்படும் தானியங்களில் நெல், அரிசி, கோதுமை, சோளம், மக்காச்சோளம், மிளகு ஆகியவை முக்கியமானவை. இவ்வண்டு கரும்பழுப்பு நிறமுடையது. இதன் தலைப்பகுதிய முக்கோண வடிவில் வளைந்தும் மார்புபகுதியில் சாய்ந்தும் இருக்கும். உடலின் பின்பகுதி தட்டையாகக் காணப்படும். இப்பூச்சிகள் சுமார் மூன்று முதல் நான்கு மி.மீ. வரை நீளமுடையது.

தாய்ப்பூச்சிகள் நன்றாக பறக்கக் கூடிய வல்லமை உடையது. இவை முட்டைகளை தனித்தோ அல்லது கூட்டமாகவே தானியம், கோணிப்பைகள் மற்றும் துவாரங்கள், சுவர் இடுக்குளிலும் இடுகின்றன. ஒரு தாய்ப்பூச்சி 500 முட்டைகள் வரை இடும் திறன் பெற்றுள்ளது. முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்களுக்கு கால்கள் உண்டு.  புழுக்கள் மெதுவாக ஊர்ந்து சென்று தானியங்களைத் துளைத்து உண்டு மாவாக்கிவிடும். இப்புழுக்கள் தாக்கப்பட்ட மூட்டைகளிலிருந்து மாவு கொட்டச் செய்யும். புழுக்கள் மூட்டைக்கு வெளியில் இருந்து கொண்டு தானியங்களை சேதப்படுத்தும் திறன் பெற்றுள்ளன. இப்புழுக்கள் சுமார்  17 நாட்களுக்குப் பிறகு கூட்டுபுழுக்களாகின்றன. இக்கூட்டுப்புழுவிலிருந்து சுமார் மூன்று நாட்களில் தாய்ப்பூச்சிகள் வெளிபடுகின்றன. இத்தாய்ப்பூச்சிகள் சுமார் நான்கு மாத காலம் வரை உயிர் வாழ்கின்றன.

முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015