சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
மாவு அந்துப்பூச்சி (Meal worm moth) புளுடியா இன்டர்பக்டெல்லா

இவ்வந்துப்பூச்சி குறிப்பாக மக்காச்சோளம் கதிர்களைத் தாக்குகின்றன. இப்பூச்சியின் முன் இறக்கையில் அடிப்பகுதி வெள்ளி நிறத்திலும் அதன் வெளிப்புறம் சிகப்பு மற்றும் நீலமும் பழுப்பு நிறமும் கலந்திருக்கும். பின் இறக்கைகள் பெரியதாகவும் வெள் பழுப்பு நிறத்துடன் உரோமங்களுடன் காணப்படும். இப்பூச்சியின் புழுக்கள் வெள்ளை நிறமாகவும் உடல் பகுதி முழுவதும் சிறிய மெல்லிய உரோமங்கள் காணப்படும். இப்புழுக்கள் மூட்டடைகளின் வெளியிலிருந்து கொண்டும் தானியங்களை உண்டு சேதப்படுத்தும். இதன் வாழ்க்கைப் பருவம் 26 முதல் 36 நாட்களாகும்.

புழு கூட்டுப்புழு முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015