சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
சேமிப்பு கிடங்கின் அந்துப்பூச்சி(Ware house moth) எஃபிசியா காட்டெல்லா

இச்சிறிய சாம்பல் நிற அந்துப்பூச்சி உலகம் முழுவதும் காணப்படுகிறது. இதன் வெளிப்புற இறக்கைகளில் குறுக்குக் கோடுகள் காணப்படும். இவை அரிசி, மக்காச்சோளம், சோளம் , நிலக்கடலை மற்றும் அனைத்து தானியங்களையும் தாக்கும். இதன் புழுக்கள் அதிக சேதமுண்டாக்க கூடியவை. ஒவ்வொரு தாய் அந்துப்பூச்சியும் 200 முதல் 250 வரை சிறிய வெண்மை நிற முட்டைகள இடும். முட்டைகளிலிருந்து வெளிப்படும் புழுக்கள் மெல்லிய நூலாம்படையினால் தானியங்களை ஒன்று சேர்ந்து விடும். பின்னர் அதிவேகமாக உண்டு, கூட்டுப்புழுவாக மாறி பின்னர் அந்துப்பூச்சி வெளிவருகின்றது. அந்துப்பூச்சியிகள் உட்காரும் பொழுது உடலின்மேல் கூரை போன்ற வடிவமைப்பும் காணப்படும். இதன் வாழ்நாட்கள் 60 நாட்களாகும்.

புழு முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015