சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
அரம் போல் அமைப்பு கொண்ட வண்டு (Sawtoothed beetle) ஒரைசோபிலஸ் சூரியநமன்சிஸ்

இவ்வண்டுகள் கோதுமை, சோளம், காய்ந்த பழவகைகள், முந்திரி வகைகள் முதலியவற்றை சேதப்படுத்துகின்றன. இந்த வண்டின் உடல் அமைப்பு நீண்டு தட்டையாக இருக்கும். சுமார் 2.5 முதல் 3.0 மி.மீ. நீளமும் உடையது. இவ்வண்டின் கழுத்து பகுதியில் ஒவ்வொருபுறத்திலும் 6 பற்களை போன்ற அமைப்பு காணப்படும். இவ்வண்டுகள் முழு தானியங்களைத் தாக்காது மற்றப்பூச்சிகளால் தாக்கப்பட்ட தானியங்களையே இவைகள் தாக்குகின்றன. தட்டையாக உடலமைப்பு இருப்பதால் இவ்வண்டுகள் எளிதாக மற்ற பண்டங்களுக்கு பரவுகின்றன. இதன் வாழ்க்கை பருவம் சுமார் 20 நாட்களாகும்.

புழு வண்டு

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015