| பயிர் பாதுகாப்பு  :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
                   
                
                | 
             
           
         
     
        
          
            கரையான்: ஓடனோடெர்மஸ் ஓபிசஸ்             
             | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - வளரும் கரும்பின் சோகையின் ஓரங்களில் அரை வட்டமாக      கரையான் கடித்தது போல் தென்படும்
 
                  - நடவு செய்த கரணைகள்      சரியாக முளைக்காமல் இருத்தல், 
 
                  - முதலில் வெளிப்புற இலைகள்      மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து போதல் பின்பு உட்புற இலைகளும் காய்தல், 
 
                  - இறுதியில்      முழுக்குருத்தும் காய்ந்து இழுக்கும்போது கையோடு வந்து விடுதல். 
 
                  - விதைக் கரணைகள் உட்புறத் திசுக்களின்றி      கரையான்       மண்      காணப்படுதல்,       கரும்பு      முழுவதும் காய்ந்து போதல் போன்றவை கரையான் தாக்குதலின் அறிகுறிகளாகும். 
 
              | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                இலைகளில் அரை வட்ட வெட்டு | 
                  | 
                காய்ந்த வெளி இலைகள் | 
                மண் நிரப்பப்பட்ட கரணைகள | 
               
              | 
           
          
            பூச்சியின் விபரம்: 
              
                - முட்டைகள் : சிறுநீரக (கிட்னி) வடிவில், சேர்ந்து காணப்படும். 30-90      நாட்களில் பொரித்துவிடும். 
 
                - இளம்குஞ்சுகள் : 8-9 முறைகள் தோலுரித்துப் பின் 6-12 மாதங்களில் முழு வளர்ச்சி பெறும். 
 
                - வளர்ந்த பூச்சிகள்: பழுப்பு கலந்த வெண்ணிற எறும்பு போன்ற சிறு பூச்சிகள், தலை அடர் நிறத்தில் காணப்படும். 
 
               
            கட்டுப்படுத்தும் முறை:  
            உழவியல் முறைகள்:  
            
              - நடவு செய்யும்போது வெள்ளநீர்ப் பாசனம் செய்வதால் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால் கரையானை கட்டுப்படுத்தலாம்.பாதிப்புள்ள பகுதிகளில் குறைந்த இடைவெளியில் அடிக்கடி நீர் பாசனம் வெய்ய வேண்டும். 
 
              - வயலில் இடைவேளி உள்ள இடங்களை நிரப்புதல். 
 
             
            இயற்பியல் முறைகள்:  
            
              - கரையான் கூடுகளைக் கண்டறிந்து அழித்தல். கரையான் மருந்தினை மன்னில் இட்ட பின்பு குறைவாக நீர் பாய்ச்ச வேண்டும். 
 
              - கரையானால் தாக்கப்பட்ட கரும்பு அல்லது விதைக் கரணைகளை வயலிலிருந்து அகற்றி அழித்து விடவேண்டும். 
 
             
            இரசாயன முறைகள்:  
            
              - இமிடகுளோப்ரிட் 70 டபிள்யூ.எஸ் மருந்தினை 0.1% அல்லது குளோர்பைரிபாஸ் 20 (இ.சி) சி 0.04% மருந்தில் விதைக் கரணைகளை 5 நிமிடம் நனைத்து எடுத்துப் பின் நடுவது சிறந்த பலன் தரும். 
 
              | 
            
              
                  | 
               
              
                |  கரையான் | 
               
              | 
           
          
            Content Validators:  
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115 | 
           
               
  |