| பயிர் பாதுகாப்பு  :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
                   
                
                | 
             
           
         
     
        
          
            மாவுப் பூச்சி: சக்காரிகாக்கஸ் சக்காரி             
             | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - இளஞ்சிவப்பு  நீள் வட்ட வடிவ பூச்சிகள் கணுக்களுக்கு கீழே இலைப் பரப்புகளின் நிற அடியில் காணப்படுகின்றன.  
 
                - வெள்ளை நிற மாவுத்துகள்கள் கரும்பின் வளர்ச்சியைக் குறைப்பதோடு வேரினையும் பாதிக்கின்றன. இதனால் கட்டைக் கரும்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. 
 
            - தேன் போன்ற திரவத்தின் மேல் கரும்பூசனப் படலம் உருவாகிக்  கரும்பி கருநிறமாகக் காட்சி அளிக்கும். 
 
            - இலைகள் மஞ்சள் நிறமாதல்
 
              | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                இலை உறை கீழே பூச்சிகள் | 
                  | 
                தேன் போன்ற திரவங்கள் | 
                முதிர்ந்த பூச்சி | 
               
              | 
           
          
            பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை : முட்டைகள் முதிர்ச்சி அடையும் வரை பெண் பூச்சியின் இனப்பெருக்க உறுப்பில் பாதுகாக்கப்படுகின்றன.  இதன் உள்வளர்நிலை குறைவே.  கன்னி இனப்பெருக்க முறையில் பெண் பூச்சிகள் 400 குஞ்சுககள் வரை பெற்றெடுக்கும்.  முட்டைகள் மஞ்சள் நிறமாக, இருபுறமும் வட்டவடிவமான உருளை வடிவத்துடன் மென்மையாக இருக்கும். 
 
                - இளங்குஞ்சுகள்: முட்டையிலிருந்து வெளி வந்த உடன் குஞ்சுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிபுகும் தன்மையுடைய உடலுடன் சுறுசுறுப்பாக இருக்கும். 
 
                - முதிர்ந்த பூச்சிகள்:  இளஞ்சிவப்பு நிறத்தில் மாவுப் படலங்களால் சூழப்பட்டு இருக்கும்.                
 
                | 
           
          
            | கட்டுப்படுத்தும் முறை:
               உழவியல் முறைகள்:  
              
                - விதைக்கரணைகளை நோய்யற்ற கரும்பிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
 
                - கோ 439, கோ 443, கோ 720, கோ 730 மற்றும் கோ 7704 போன்ற எதிர்ப்பு இரகங்களைப் பயன்படுத்தவும். 
 
                - நடுவதற்கு கரும்பில்லுள்ள கணுப்பகுதியை தேர்ந்தெடுத்து நடுவும் 
 
                - வயலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடித்து விடவும். 
 
               
              இயற்பியல் முறைகள்:  
              
                - வெப்ப சிகிச்சைக்கு பின்பு கரணைகளை அரிடான் / அகலால் (0.1 %யை நீரில்கரைத்து ) நனைத்து அதன்பின் நடவும். 
 
                - கரணைகளை சாக்குப்பை வைத்து துடைத்த பின் மாலத்தியான் (0.1 %யை நீரில்கரைத்து )யில் நனைத்து நடவும்.
 
                - 150 மற்றும் 210 வது நாட்களில் சோகை உரித்தல். 
 
                - அதிக தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கவும்.
 
               
              இரசாயன முறை:  
              
                - இப்பூச்சியின் தாக்கம் தென்படும்போது கரும்புத் தண்டுகளின் மீது மட்டும் படுமாறு மீதைல் பாரத்தியான 50 EC 1000 மி.லி, மாலத்தியான் 50 EC 1000 மி.லி மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கவும். 
 
                - கரணைகளை நடுவதற்கு முன்பு மாலத்தியான் (0.1 %யை நீரில்கரைத்து ) அல்லது டைமீதோயேட் (0.06 %யை நீரில்கரைத்து ) 15 நிமிடங்கள் நினைத்து வைத்து அதன்பின் நடவும்.
 
                - அதிக நோய்தாக்கத்தை கண்டறியும் போது தோகையை உரித்து டைமெத்வேட்30 EC,  1 லிட்டர் நீரில் கலந்து அதனுடன் மீன் எண்ணெய் ரிசின்சோப்பு 1 லிட்டர் நீரில் 1.5 கலந்து தெளிக்க வேண்டும். இதனை வளரும் நுனி பகுதியிலும்,  கணு பகுதியிலும் மற்றும் மண்ணிற்கு 
 
                | 
           
          
            Content Validators:  
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115 | 
           
               
  |