| பயிர் பாதுகாப்பு  :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
                   
                
                | 
             
           
         
     
        
          
            இளங்குருத்துப் புழு: சைலோ இன்பஸ்கேட்டுலஸ்                      
             | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - 1-3 மாத வயதுடைய பயிர்களை இப்பூச்சி அதிகமாகத் தாக்கும். 
 
                - புழுக்கள் தோகை சேரும் இடத்தில் உள்ள இளந்தண்டுகளை துளைத்து உள்ளே சென்று திண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும் இதனை. இழுத்தால் எளிதில் வந்துவிடும். 
 
                - காய்ந்த குருத்திலிருந்து துர்நாற்றம் வீசும். 
 
                - நிலமட்டத்திற்கு மேலே பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும். 
 
              | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                நடுக்குருத்து காய்தல் | 
                  | 
                துளைகள் | 
                  | 
                அழுகிய திசு | 
               
              | 
           
          
            பூச்சியின் விபரம்: 
              
                -                   முட்டை:அளவுகோல் போன்று முட்டைகள் 3-5 வரிசைகளாக 4-100 முட்டைகள்  கூட்டமாகக் சோகையின்   அடிப்புறத்தில் காணப்படும்.  இக்கூட்டங்கள் டைல்ஸ்கள் போன்று ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருக்கும். இது 4-6 நாட்களில் பொரித்து புழுக்கள் வெளிவரும்.                
 
                -                   இளம்புழு:  இது பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் 5 ஊதா நிறக் கோடுகளுடன் காணப்படும். தலை அடர் பழுப்பு நிறத்துடனும் 16-30 நாட்கள் வாழ் நாட்களும் கொண்டது.                
 
                -                   கூட்டுப்புழு:  கூட்டுக்குள் செல்லு முன் புழுவானது பயிரின் தண்டில் ஒரு பெரிய துளையிட்டு அதனை பட்டு நுால் கொண்டு மூடிவிடும். பின் நீண்ட கூட்டுக்குள் அடைந்திருக்கும்.                
 
                -                   பூச்சி:  வெளிர் சாம்பல் பழுப்பு நிற பூச்சியில் கருப்பு நிற புள்ளிகள் முன் இறக்கைகளில் காணப்படும். பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.                
 
                | 
           
          
            |                   | 
           
          
            | கட்டுப்படுத்தும் முறை:
               பொருளாதார சேத நிலை : 15% வெண்கதிர் அறிகுறிகள்  
              உழவியல் முறைகள்:  
              
                - கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும். 
 
                - சாகுபடிப் பருவத்தில் டிசம்பர்– ஜனவரி முன்பட்டத்தில் பயிர் செய்தால் இளக்குருத்துப் புழுவின் தாக்குதலை குறைக்கலாம்.   
 
                - தக்கைப்பூண்டினை ஊடு பயிராகப் பயிரிடுவது நல்ல பலனளிக்கும். 
 
                - நடவு செய்த 3 நாட்கள் கழித்து காய்ந்த சோகையினை 10-15 செ.மீ உயரத்திற்கு பரப்பி மூடி வைக்க வேண்டும். 
 
                - மண்ணின் வெப்பத்தினைக் குறைக்க போதுமான நீர் பாய்ச்சுதல் மற்றும் ஈரப்பதத்தினை அதிகரிப்பது இளங்குருத்துப் புழுப் பெருக்கத்தினை தடுக்க இயலும். 
 
                - 45வது நாளில் பகுதி மண் அணைப்பதால் இளக்குருத்துப் புழுவின் தாக்குதலை குறைக்கலாம்.   
 
               
              இயற்பியல் முறைகள்:  
              
                - இணக்கவர்ச்சி பொறி 10 / ஏக்கர் என 45 செ.மீ உயரத்தில் வயலில் பொருத்த வேண்டும் 
 
                - தாக்கப்பட்ட நடுக்குருத்துகளை சேகரித்து அழித்து விடவேண்டும். 
 
               
              உயரியல் முறை:  
              
                - 1.5 x 113 ஐ.பி/எக்டர் அதாவது 750 நோயுற்ற கிரானுலோசிஸ் வைரஸ்களை ஒரு ஹெக்டரில் நடவு செய்த 35 வது மற்றும் 50 வது நாளில் விட வேண்டும். 
 
                - டாச்சினிட் ஒட்டுண்ணியான ஸ்டர்மியோப்சிஸ் இன்பெரன்ஸ்ன் கிராவிட் பெண் பூச்சிகள் 125 னை ஒரு ஏக்கர் வயலுனுள் விடலாம். 
 
               
              இரசாயன முறை:  
              
                - பொருளாதார சேத நிலையை 15% தாண்டினால் கீழ்காணும் ஏதேனும் ஒரு மருந்தினை அடிக்கவும். 
 
                - கார்போரைல்+லின்டேன் (செவிடால்) 4% (குருனைகள்) 12.5 கி.கி, லின்டேன் 10 கி 12.5 கி.கி, கார்போஃபியூரான் 3 ஜி 33 கி.கி (மண்ணில் இடுதல்).  குருணைகள் இட்ட உடனே நீர் பாய்ச்சுதல் அவசியம். 
 
                - குளோர்பைரிபாஸ் 1000 மி.லி டீபால் (250 மி.லி/500 லி நீருக்கு) உடன் கலந்து தெளிப்பதால் இலைப்பரப்பில் மருந்து நன்கு ஒட்டிக்கொள்ளும்.  உயர் அழுத்தத் தெளிப்பான்களைப் பயன்படுத்தித் தெளிப்பது சிறந்தது. 
 
              | 
           
          
            Content Validators:  
              Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
              Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
              Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115. 
                             Source of Images: 
            http://www.nbair.res.in/insectpests/Chilo-infuscatellus.php | 
           
               
  |