பூச்சியின் விபரம் 
      
        - புழுக்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  தலை பழுப்பு நிறத்துடன்,   உடலின் மேற்பரப்பில் கரும்புள்ளிகளும் காணப்படும்.  தாய் அந்துப்பூச்சி பழுப்பு   நிறத்தில் இருக்கும் 
 
       
        
         | 
    கட்டுப்படுத்தும் முறைகள்: 
      
        - குருத்துக் காய்ந்த செடிகளை வயலிலிருந்து அகற்றிவிடவேண்டும் 
 
        - அறுவடை செய்த உடனே, சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம்   தண்டுத்துளைப்பானின் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம் 
 
        - அவரை அல்லது தட்டைப்பயிரை 4:1 என்ற விகிதத்தில் சோளத்துடன் ஊடுபயிராக செய்வதன்   மூலம் இப்பூச்சியின் தாக்குதலை சிறிதளவு குறைக்கலாம் 
 
        - விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம் 
 
        - முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோக்ரைமா, பிராக்கன் மற்றும் புழு   ஒட்டுண்ணியான மைக்ரோபிராக்கள், ஏபன்டெலஸ் ஆகியவைகளை பயன்படுத்தி அந்துப்   பூச்சியின் முட்டைக் குவியலையும், புழுக்களையும் சேர்த்து அழிக்கலாம் 
 
                |