பூச்சிப்பொறிகள் : 
               
              தானிய  சேமிப்பின் போது  ஏற்படும் பூச்சிகளை கண்காணித்து  அழிக்கவல்ல பூச்சிப்பொறிகள்: 
               
              தானிய சேமிப்பின்போது  ஏற்படும் பூச்சிகள் பெரும்பாலும் வயலிலிருந்து சேமிப்பு கிடங்குகளுக்கும், அறைகளுக்கும்  பரவுகின்றன. தானியங்கள் சேமிக்கப்படும்போது, ஆரம்ப காலத்தில் மிகமிக குறைந்த அளவே  இப்பூச்சிகள் காணப்படுகின்றன. இந்த ஆரம்ப காலத்திலேயே குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கை  எடுப்பதன் மூலம் சேமிப்பு காலத்தில் மாலை வேளையிலும், காற்றோட்டம் அதிகமுள்ள இடங்களை  நோக்கி சுற்றித் திரியும் இயல்புடையது. எனவே இக்காலங்களில் இப்பூச்சிகள், உண்ணுவதற்கு  தானியங்கள் இருந்து போதிலும், தானியங்களை விட்டு வெளியே வரும். பூச்சிகளின் இந்த இயற்கையான  இயல்பை பயன்படுத்தி ஆரம்ப காலத்திலேயே அவைகளை தானியங்களிலிரந்து வெளியேற்ற தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல புதிய சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளது. 
   
  குழாய் வடிவப்பொறி 
              
                
                    | 
                 
               
               குழாய் வடிவமைப்பு  கொண்ட இப்பொறியில் மேற்பகுதியில் 2 மி.மீ துவாரங்கள் உள்ளன. கீழே கூம்பு வடிவத்தில்  பிளாஸ்டிக் மூடி உள்ளது. பொறியின் மேற்பகுதி யிலும்  ஒரு பிளாஸ்டிக் மூடி உள்ளது. மேற்பகுதி  மட்டும் வெளியே  தெரியும்படி இப்பொறியை நேராகத் தானியத்தில் வைக்க  வேண்டும். தானியங்களில் உள்ள பூச்சிகள் அங்கும் இங்கும் நடமாடும் போது துவாரங்களில்  வழியாக பொறியில் நுாந்து கீழ்நோக்க வரும்போது பொறியில் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள  புனல் வடிவ அமைப்பினால் சறுக்கப்பட்டு கூம்பு வடிவ மூடியில் அகப்பட்டுக் கொள்கின்றன.  வாரம் ஒரு முறை பொறியை வெளியில் எடுத்து பூச்சிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். 
                 
                கூம்பு வடிவ பொறி 
                 
                பொதுவாக இப்பொறி  பம்பரம் போன்று காணப்படும். இப்பொறியின் மூடி 3 மி.மீ. துவாரங்களை (ஒரு சதுர அங்குலத்தில்  29-30 துவாரங்கள்) கொண்ட ஒரு தகடால் செய்யப்பட்டது. இதை எளியதாக கூம்பு போன்ற வடிவத்திலிரந்து  பிரித்தெடுக்கலாம். இப்பொறியின் கூம்பு வடிவ பகுதியின் உள்ளே கோந்து பொருள்களை நன்கு  தடவி 3 மி.மீ. துவாரங்களை கொண்ட தகடால் மூடி, சேமிக்கப்படும் பயறுகளின் கலனின் மேற்பகுதியில்  மூடியின் கீழ்ப்பகுதி துவாரங்கள் மட்டும் பயிரின் உள்ளே இருக்குமாறு பதித்து வைக்க  வேண்டும். 
              
               தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழக பொறியில் கோந்துப் பொருட்களை பயன்படுத்தத் தேவையில்லை. பயறுகளிலிருந்து  வெளிவரும் வண்டுகள் இனப்பெருக்கத் திற்காக கலனின் மேற்பகுதியை நோக்கி வரும்போது பொறியில்  உள்ள துவாரங்களில் நுழைந்து, சறுக்கி, குழாய் வடிவம் கொண்ட பொறியின் அடிப்பாகத்தில்  உள்ள பகுதியில் மாட்டிக் கொள்ளும். இதன் மூலம் பயறு வண்டுகளின் சேதத்தை குறைக்கலாம். 
                 
                பயறுவண்டுகளை பிடித்தழிக்கும்  பொறி 
                 
                இப்பொறி, பம்பரம்  போன்ற மூடியையும் அதன் கீழ்ப்பாகம் குழாய் போன்ற வடிவமைப்பையும் கொண்டது. மூடியிலும்,  குழாய் பகுதியிலும் 3 மி.மீ. துவாரங்கள் உள்ளன. பயறுகளில் காணப்படும் வண்டுகள் இனப்பெருக்கத்திற்காக  கலனின் மேலப்குதியை நோக்கி வரும். அச்சமயம் பொயியில் உள்ள துவாரங்களில் நுழையும்.  பின்னர் சறுக்கி கூாய் வடிவம் கொண்ட பாறியின் அப்பாகத்தில் உள்ள பகுதியில் மாட்டி்  கொள்ளும். பயறுவகைப் பயிர்களை சேமிக்கும்போது வண்டுகள் வெளிப்படுதலைக் கண்டறியவேண்டும்.  இதனைக் கண்டுபிடித்து விட்டால் தாய்மார்கள், உழவர்கள் மற்றும் அனவைரும் சூரியஒளியை  பயன்படுத்தி பயறுகளில் இருந்து வெளிப்படும் வண்டுகள் இடும் முட்டைகளை எளிதாக அழித்துவிடலாம்.  
   
  கிண்ண வடிவ பொறி 
   
                இப்பொறி கிண்ணம்  போன்ற கூம்பு வடிவ அமைப்பு உடையது. 3 மி.மீ துவாரங்கள்  (ஒரு சதுர அங்குலத்திற்கு 29-30 துவாரங்கள்( கொண்ட தகடுகளால் செய்யப்பட்டது. இக்கிண்ணத்தின்  கீழே ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவும் மற்றும் வட்ட வடிவில் ஒரு தட்டும் உள்ளது. இதில்  ஒட்டுப் பொருள்கள் (கோந்து) பூசப்பட்டுள்ளது. இது 200-250 கிராம்  கொள்ளளவு கொண்டது. அறுவடை முடிந்த பயறுகளை சேமிக்கும்  முன் 200 -250 கிராம் அளவு பயறுகளை இக்கிண்ணத்தில்  சேமித்து தினமும் கண்காணிக்க ஏதுவாக ஒர் இடத்தில்  வைக்க வேண்டும். 
                வயலிலிருந்து புழுக்களை  தன்னுள் கொண்டுள்ள பயிறுகளிலிருந்தும் வரும் வண்டுகள் வெளிப்படும் போது. அவைகள் அங்கும்  இங்கும் விரைவாக ஒடத் துவங்கும். அப்பொழுது கிண்ணத்தின் துவாரங்களின் மூலம் நுழைந்து,  சறுக்கி கீழே  விழுந்து டப்பாவிலும், தகட்டிலும்  ஒட்டிக் கொள்ளும். இதனை கண்டவுடன் சேமித்து வைத்துள்ள பயறு வகைகளை வெளியே எடுத்து  சூரிய ஒளியில் காய வைப்பதால் வண்டுகள் இடும் முட்டைகளை எளிதாக அழித்து விடலாம். 
   
  பூச்சிகளைத் தானாகவே  அகற்றும் சேமிப்புக்கலன் 
   
                சேமிப்புத் தானியங்களை  பல வகையான பூச்சிகள் தாக்கி அழிக்கின்றன. இப்பூச்சிகளைத் தானாகவே தானியங்களிலிருந்து  அகற்ற ஒரு புதிய சேமிப்புக்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வீட்டு உபயோகத்திற்காக  வைத்துள்ள தானியங்கள் மற்றும் விதைக்காக வைத்துள்ள தானியங்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப்  பயன்படுத்தலாம். மற்றும் இக்கலனில் அரிசி, கோதுமை, சோளம் பயறு வகைத் தானியங்களை சேமிக்கலாம்.  
               
              
               இத்தானியங்களைத் தாக்கும்  அரிசிக்கூன் வண்டு, மாவு வண்டு, பயறுவண்டு போன்ற பல வைகயான வண்டுகள் தானியத்தில் அங்கும்  இங்கும் நடமாடும் போது கலனியல் உட்பாகத்திலுள்ள துவாரங்கள் வழியாக வெளிவந்து சறுக்கி  கலனின் கீழ்ப்பாகத்தில்  உள்ள  பெட்டியில் விழுந்து அகப்பட்டுக் கொள்கின்றன. இவ்வாறு  விழுந்த பூசு்சிகள் வெளியே வராத வண்ணடம்  இக்கலனின்  அடிப்பாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலன்கள் 2 கிலோ, 25 கிலோ, 100 கிலோ மற்றும்  500 கிலோ என்ற கொள்ளளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளன. 
                 
                ஊதாக்கதிர் விளக்குப்பொறி  
                 
                சேமிப்புக் கிடங்குகளில்  காணப்படும் பூச்சிசகளைக் கவர்ந்து அழிக்க ஊதாக் கதிர் விளக்குப் பொறி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இப்பபொறி ஊதாக்கதிர்களை வெளியிடும் 4 வாட் விளக்கினைக் கொண்டது. இப்பொறி யை சேமிப்புக்  கிடங்களில் தரையிலிரந்து சுமார் 1.5 மீ உயரத்தில் சுவர்ப் பகுதியின் அடியில் வைத்தல்  வேண்டும். நெல் மற்றும் அரிசியைத் தாக்கும் ரைசோபர்தா, டிரைபோலியம் வண்ட போன்ற பல  வகை வண்டகள் அதிக அளிவல் இப்பொறியால் ஈர்க்கப்படுகின்றன. இப்பொறியைக் குறிப்பாக தானியங்களை  நீணடநாள் செமித:த வைக்கும்பொதும், பூச்சி தாக்கப்ட்ட தானிய மூட்டைகள் கிடங்கிற்கு  வரும்போதும், புகை மூட்டம் போட்ட பின்பும் பயன்படுத்துவதன் மூலம் பூச்சிகளின் சேதம்  விரைவாகப் பெருகவதைத்தடுக்கலாம். 
   
  புதிய உபகரணப்பெட்டி 
               
              இந்த  புதிய உபகரணப்பெட்டியில் மேற்கூறிய உபகரணங்களின் மாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும்  அவற்றின் பயன்பர்டு பற்றிய குறுந்தகடு () உடன் இணைக்கப்பட்டள்ளது. இது விவசாயக் கல்வி,  மனையியல் கல்லூரிகள், விரிவாக்கப் பணியாளர்கள், தானிய சேமிப்புக் கழக கண்காணிப்பாளர்களுக்கும்  மற்றும் விஞ்ஞானிகளுக்கும் பள்ளிகளில் உள்ள அறிவியல் குழுக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும். 
             |