பயிர் பாதுகாப்பு :: கீழாநெல்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர் : கீழாநெல்லி, அறிவியல் பெயர் : ஃபில்லாந்தஸ் நிரூரி,

குடும்பம் : யூஃபோர்பியேசியே
அசுவினி

இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலைகளில் சாறை உறிஞ்சவதால் செடிகள் வளர்ச்சி குன்றி நலிந்து தென்படும். தாக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறி, பின்னர் காய்ந்து உதிர்ந்து விடும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற கழிவுப் பொருள், தாக்கப்பட்ட பகுதிகளின் மேல் படர்ந்து  மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும்.
மேலாண்மை முறைகள்

  • செடியின் பாதிக்கப்பட்ட  பகுதிகளை சேகரித்து அழிக்கவும். பொறி வண்டு மற்றம் கிரைசோபா இரை விழுங்கிகள் அசுவினியின் எண்ணிக்கையை ஓரளவு குறைக்கின்றன.
  • அசுவினியைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் (அ) அசாடிராக்டின் 1 சத கரைசலை 0.1 சத ஒட்டும் கரைசல் டீப்பாலுடன் கலந்து தெளிக்கவும்.
அசுவினி, மக்ரோசைபம்  யுபோர்பியே

வெள்ளை ஈ
இளம்  பூச்சிகளும்,  வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்பரப்பில், ஏராளமான எண்ணிக்கையில்  இருந்து கொண்டு தொடர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் காய்ந்து விடுகின்றன. மேலும் இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும்.
மேலாண்மை முறைகள்

  • செடியின் பாதிக்கப்பட்ட  பகுதிகளை சேகரித்து அழிக்கவும்.
  • மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இதனைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சத  கரைசலை ஏக்கருக்கு 0.1 சத ஒட்டும் கரைசல் டீப்பாலுடன் கலந்து தெளிக்கவும்.
இலைப்பேன் – திரிப்ஸ்  டெபேசி

இலைப்பேன்
இளம்  பூச்சிகளும்,  வளர்ந்த பூச்சிகளும் இலைகள் மற்றும் செடியின் நுனிக்குருத்து போன்ற பாகங்களில்    கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. தாக்கப்பட்ட இலைகள்  சுருண்டு வாடி விடுகின்றன.
மேலாண்மை முறைகள்

  • நீல நிற ஒட்டுப் பொறிகளை அமைத்து இப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இதனைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம்  அல்லது வேப்பெண்ணெய் 3 சத கரைசலை 0.1 சத ஒட்டும் கரைசல் டீப்பாலுடன் கலந்து தெளிக்கவும்.
வெள்ளை ஈ, பெமிசியா டெபேசி

செம்பேன் சிலந்தி
இப்பூச்சியின் இளம் மற்றும் வளர்ந்த உயிரிகள்  கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. இப்பூச்சிகள் தாக்கிய இடங்களில் வெண்மை நிறப் புள்ளிகள் உருவாகி பின்னர் முழு இலையும் வெண்மை நிறமடைவதால் அவை காய்ந்து சருகாகி விடுகின்றன.
மேலாண்மை முறைகள்

  • இயற்கையில் இரை விழுங்கும் சிலந்திகளில் ஒன்றான பைடோசிலஸ் பெர்சினிலிஸ், இந்த செம்பேன் சிலந்தியைக் கட்டுப்படுத்துகின்றது.
  • வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம்  அல்லது வேப்பெண்ணெய் 3 சத கரைசலை 0.1 சத ஒட்டும் கரைசல் டீப்பாலுடன் கலந்து தெளிக்கவும்.
செம்பேன் சிலந்தி   
Updated on March, 2014



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015