1. வெள்ளை  அழுகல் – ஸ்ளேரோடியம் செபிவோரம் 
              அறிகுறிகள்: 
              
                
                  - ஸ்க்ளேரோடியம் செபிவோரமால் வெள்ளை  அழுகல் ஏற்படும். ஒரு முறை பூசண வித்து வயலில் தோன்றினால் 20 – 30 வருடங்கள் வரை பூண்டுகள்  பயிர் செய்யாதிருந்தாலும் வயலிலேயே தங்கிவிடும்.
 
                  - குளிர்ந்த வெப்பநிலை பூஞ்சாணிற்கு உகந்த  வெப்பநிலை ஆகும். 750 பே – டிற்கு மேல் வெப்பநிலை இருக்கக் கூடாது. பூண்டு  இனம் முதலில் தாக்கப்படும்.
 
                  - அடி இலைகள் அழுகியும், மஞ்சள் நிறமாக  மாறி தலை கீழாகக் காணப்படும்
 
                  - முதிர்ந்த இலைகள் முதலில் நிலை குலைந்து  போகும்.
 
                  - வேர் அழுகி செடியை முழுவதுமாக நிலத்தை  தொடும் அளவிற்கு கீழே தள்ளி காணப்படும்
 
                  - வேர்கள் மற்றும் குமிழ்களை வெள்ளை நிறத்தில்  பஞ்சு போன்று பூசண இழைகளால் மூடப்பட்டு இருக்கும்
 
                  - தாக்கப்பட்ட குமிழ்களில் நீர் போன்று  காணப்படும். வெளிப்புற செதில்கள் வெடிப்புற்று, குமிழ்கள் வறண்டும், சுருங்கியும் தோன்றும்.  சிறிய கருப்பு நிற பூசண வித்துக்கள் பாதிக்கப்பட்ட குமிழ் பகுதிகளில் காணப்படும்.
 
                 
               
              2. அடி  அழுகல் – ஃபுசேரியம் கல்மோரம் 
              அறிகுறிகள்: 
              
                
                  - மண் மூலம் இந்நோய் பூண்டினுடைய வேர்கள்  அல்லது சேமித்து வைக்கப்பட்ட இலையைக் காட்டிலும் தண்டுப் பகுதியைத் தாக்கும். தாக்கப்பட்ட  செடிகளில் உள்ள இலைகள் நோய் தாக்குதலுக்கான அறிகுறியை உருவாக்காது, ஆனால் நோய் தாக்குதல்  ஏற்பட்டு இருக்கும்.
 
                  - பூஞ்சாண்கள் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணிலேயே  ஊடுருவும். ஃபுசேரியம் கல்மோரம் யானை பூண்டை தான் தாக்கும், இதே அளவு பூண்டை தாக்காது.  வெங்காயம் ஊடுபயிர் இல்லை
 
                 
               
              3. கருப்புப்  பூசணம் – அஸ்பர்ஜில்லஸ் நைகர் மற்றும் அ.அலியேசியஸ் 
              அறிகுறிகள்: 
              
                
                  - வருடம் முழுவதும் தோன்றும்
 
                  - முழு திசுக்களும் கருப்பு நிறத்தில்  சாம்பல் போன்று காணப்படும்
 
                  - தனியாக இருக்கும் குமிழ் உதிர்ந்துவிடும்  மற்றும் உறைப்பை இழந்துவிடும்
 
                 
               
              4. உட்குமிழ்  அழுகல் / டிடிமக்ரோபோமினா ஃபேசியோலினா 
              அறிகுறிகள்: 
              
                
                  - சிறிய ஊசிமுனை போன்று நுண்ணிய பூசண  வித்துக்கள் செதில்களின் மேல் தோன்றும்
 
                  - குமிழ்கள் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும்
 
                  - தாக்கப்பட்ட குமிழ்கள் அதன் உறைப்பை  இழந்துவிடும்
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                
                  - இந்த நோயைக் கட்டுப்படுத்த பூண்டு குமிழை  வறண்ட காற்றோட்டம் உடைய இடத்தில் சேமித்து வைக்கவும்.
 
                  - தாக்கப்பட்ட குமிழ்களை சேமிப்பதற்கு  முன்பே அகற்றிவிட வேண்டும்
 
                  - 0.03% ஃபார்மாலின் கிருமி நாசிணியை குமிழ்களுக்கு  பயன்படுத்தவும்.
 
                 
               
               |