| பயிர் பாதுகாப்பு :: ரோஸ்மேரி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              ரோஸ்மேரியில்  சினியோல்,  போர்னியோல்,  வெர்பினால்  போன்ற  வேதிப்  பொருட்கள்  உள்ளன.  இலையில்  0.5 – 1.5 சதவீதம்  வாசனை  எண்ணெய்  உள்ளது.  சிறுநீர்  கோளாறு  நோயைக்  குணப்படுத்த  ரோஸ்மேரி  பயன்படுகிறது.  வாசனை  திரவியங்கள்  மற்றும்  எண்ணெய்  தயாரிப்பில்  ரோஸ்மேரி  பயன்படுகிறது.   வாடல் நோய்  
              இந்நோய்  இளம்  நாற்றுகளைத்  தாக்கக்கூடும்.  இந்நோயானது  ஆகஸ்டு  – செப்டம்பர்  மாதங்களில்  காற்றின்  வெப்பநிலை  மற்றும்  ஈரப்பதம்  அதிகரிக்கும்  போது  அதிகமிருக்கும்.  இதைத்  தடுக்க  விதைப்பதற்கு  முன்  விதைகளை  விதை  நேர்த்தி  செய்ய  வேண்டும்.  ஒரு  கிலோ  விதையை  இரண்டு  கிராம்  கார்பண்டாசிம் மருந்தில்  கலந்து,  பின்  விதைக்க  வேண்டும்.  பயிர்  சுழற்சி  மூலம்  வாடல்  நோய்  வராமல்  தடுக்கலாம்.   இலைப்புள்ளி நோய்  
              இலைப்புள்ளி,  இலைக்  கருகல்  நோய்  இலைகளைச்  சேதப்படுத்தும்.  குறிப்பாக,  மழைக்காலங்களில் இந்நோய்  தென்படும்.  இதனைக்  கட்டுப்படுத்த  இரண்டு  கிராம்  மான்கோசெப்  மருந்தை  ஒரு  லிட்டர்  தண்ணீரில்  கலந்து  தெளிக்க  வேண்டும்.               
               
            Updated on Feb, 2014 
  | 
           
         
         
 |