உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல்

நச்சுயிரியை பெருமளவில் உற்பத்தி செய்தல்
கைலோ இன்பஸ்கேட்டெல்லஸ் – லிருந்து கிரானுலோஸிஸ் வைரஸ்

தயாரிப்பு முறை :

  • கிரானுலோஸிஸ் வைரஸ், உயிரியல் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வாய்வழி உணவூட்டல் சிகிச்சை மூலம் தயாரிக்கப் படுகிறது.
  • இளம் கரும்பு தண்டு துண்டுகளை கழுவி, பின் 6.4 x 7.4 அளவு கொண்ட கலனில் (3  துண்டு/ கலன்) ஈரமான காகித வடிகட்டி வைத்து, துண்டுகளை அதன் மீது வைக்கவும்.
  • மருந்தளவு 1x108  OB/ மிலி - யில்    0.01% டீபால் யை கலந்து, பின்  4- ம் பருவத்து புழுவின் தலையை அந்த கலவையில் முக்கி எடுக்கவும்.
  • ஒரு கலனில் கறுப்புத் துண்டுக்கு  1-2 புழு இட்டு, கலனை மூடிவிடவும்.
  • ஒவ்வொரு நாளும் கரும்பு துண்டை மாற்றவும்.
  • புழுக்கள்  6 – ம் நாட்களுக்குப் பின் இறக்கத் தொடங்கும். அதனை கிருமி நீக்கப்பட்ட கலனின் சேகரித்து, உறைகலனில் சேமிக்கவும்.
  • நியூக்ளியர் பாலிகெட்ரோஸிஸ் வைரஸ் மற்றும் கிரானுலோஸிஸ் வைரஸ்சுக்கும் ஒரே மாதிரியான செயலாக்க முறையாகும்.
  • இதில், ஆரம்பத்தில் 700rpm  மற்றும் கடைசியில்  8000 rpm 30 நிமிடத்திற்கு இறந்த புழுக்களை மைய விலக்கல் செய்யப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு |  பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016