உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல்

பூசணத்தை பெருமளவில் உற்பத்தி செய்தல்
பச்சை மஸ்கர்டைன் பூஞ்சை -  மெட்டாரைஸ்ஸியம் அனிசோபிலியே
பேரளவு உற்பத்தி 
  • அரிசி திவிடு கலந்த மரவள்ளி கிழங்கு வற்றலுடன் பிற்சேர்க்கையாக யூரியா அல்லது மீன் தூள் சாறு
  • கொப்பரை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் இளநீர்.
  • கேரட் நீர் நொதி

கேரட் நீர்நொதி :
40 கிராம் கேரட் துண்டுகளை 250 மிலி கூண்டு  குடுவையினுள் இட்டு, 15 மிலி வடிநீர் சேர்க்கவும்.
கூம்பு குடுவையை பஞ்சு வைத்து அடைத்து பின்20 நிமிடத்திற்கு 15 Psi   க்கு அழுத்த அனற் கலனில் வைக்கவும்.
குடுவையை குளிரச் செய்து, அடுக்குப் பாய்வு கலனில் மெ. அனிசோபிலியே பூஞ்சை வித்துக்களை குடுவையினுள் செலுத்தவும்.
இரண்டு வாரம் அறை வெப்பநிலையில் வைத்து பின் அறுவடை செய்யவும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு |  பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016