தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவை  தயாரித்தல்  
              கரும்பு சாறு நுரைமம் ஊடகம்  தாயரித்தல்  
              
                - கரும்பு சாறு  - 30 கிராம் 
 
                - நுரைமம் – 5 கிராம் 
 
                - வடிநீர் – 1000 மிலி 
 
               
              தயாரித்த ஊடகத்தை கூம்பு குடுவையில்  வைத்து 151b அழுத்தத்தில் 15 நிமிடத்திற்கு அழுத்த அனற்கலனில் வைத்து கிருமி நீக்கம்  செய்யவும்.  
              ஊடகத்தை குளிரச்  செய்து, பின் 10 நாட்கள் வயதுடைய டிரைக் கோடெர்மா  பூஞ்சையை உட்செலுத்தவும். 10 நாட்களுக்குப்   பின் இதனை தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவையாக பயன்படுத்தவும்.  
              பேரளவு உற்பத்தி :  
                கரும்பு சாறு நுரைமம் ஊடகம்  தயாரித்து கிருமிநீக்கம் செய்யவும்.  
                பின் ஊடகத்தை குளிரச் செய்து,  தாய் வளர்ச்சி ஊடுபொருள் கலவையை 1.5 லிட்டருக்கு, 50 லிட்டர் ஊடகம் என்றளவில் இட்டு,  அறை வெப்பநிலையில் 10 நாட்களுக்கு வைக்கவும்.  
            தாயரித்த நீர் நொதியில் உள்ள  பூஞ்சை வளர்ச்சியை சீமைச் சுண்ணாம்புக் கல்லோடு சேர்த்து விணியோகிக்கப்படுகிறது.   |