| பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            காயழுகல் நோய் 
             
              
                - ஃபியுசேரியம் மொனிலிஃபார்மி, கோலிட்ரோட்ரைக்கம்கேப்சிஸி, அஸ்பெர்ஜில்லஸ்ஃபிலேவஸ், அ. நைகர், ரைஜோபஸ்நைக்ரிகன்ஸ், போட்ரிடிப்லோடியா வகை போன்ற  நோய்க்காரணிகள் காய் அழுகலுடன்  தொடர்பு கொண்டுள்ளன.
 
               
              அறிகுறிகள் 
                
               
              
                - காய் முழுவதும் கருப்பு  (அ)  பழுப்பு நிற  புள்ளிகள் காணப்படும்.
 
                - அழுகல், வெளியிலோ (அ) உட்பகுதியிலோ காணப்படும்.
 
                - காய், வெடிக்காமல், இளம்பருவத்திலேயே உதிர்ந்துவிடும்.
 
               
மேலாண்மை 
            
              - போதுமான இடைவெளி விடவும்.
 
              - பரிந்துரைக்கப்பட்ட உர அளவை  பயன்படுத்தவும்.
 
            - கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ  /   எக்டர், 45 – ம் நாள்  முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும்.
   | 
            
                 
                             | 
           
       
  |