சாம்பல் (அ) தயிர்ப்புள்ளி நோய் : ராமுல்லேரியா ஏரியோலா  
             
              அறிகுறிகள் 
              
              
                - இலையின் அடிப்புறத்தில், ஒழுங்கற்ற,  கசியும் புண்களுடன்  சாம்பல் நிற  புள்ளிகள் இலையின்  மேற்பரப்பில் காணப்படும்.
 
                - நோய் தீவிரமடைந்த நிலையில்  சாம்பல் நிற நுண்துகள்கள்  இலையின் மேற்பரப்பிலும் காணப்படும்.
 
                - பாதிக்கப்பட்ட இலைகள் நுணியிலிருந்து உள்நோக்கி காயத்தொடங்கும்; பின்  மஞ்சள் நிறமாகி,  இளம் இலைகள்  உதிர்ந்துவிடும்.
 
                - நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட  வகைகள் சுஜாதா  மற்றும் வரலட்சுமி  போன்றவைகளை பயன்படுத்தவும் 
 
       
            மேலாண்மை 
            
              - தாவரக்குப்பைகளை அகற்றி தீயிடவும் 
 
              - தானாக வளர்கின்ற பருத்தி  செடிகளை அகற்றவும் 
 
              - அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை  தவிர்க்கவும்.
 
              - மண்ணின் நிலை மற்றும்  தாவர வகைகளைப்  பொருத்து வயலில்  இடைவெளியை சரிசெய்யவும்.
 
              - கார்பென்டசிம் 250 கிராம் (அ) வெட்டபுலள் சல்பர்  1.25 – 2.0 கிலோ / எக்டர், வாரத்திற்கு ஒருமுறை  தெளிக்கவும்.
 
              | 
            
              
              
                  | 
                  | 
               
              
                வெள்ளை  சாம்பல்  நிற  புள்ளிகள்   | 
                 
                            |