அறிகுறிகள் 
              
               
              
                - பாதிக்கப்பட்ட இளஞ்செடியின் விதையிலைகள்  மஞ்சளாகவும் பழுப்பாகவும்  மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம்  காணப்படும்.
 
                - நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும்.  வளர்ந்த செடியில் நோய்  தொற்றினால், அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில்  மஞ்சளாக மாறி,  பின் வாடி  உதிர்ந்து விடும்.
 
                - தண்டின் அடிப்பகுதி கருமையாகவும்,  உரித்துப் பார்த்தால்  கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் காணப்படும்.
 
       
            கட்டுப்பாடு 
            
              - அமிலம் மூலம் பஞ்சு  நீக்கிய விதைகளை,  கார்பாக்சின் அல்லது  கார்பென்டசிம் 4 கிராம்  / கிலோ கொண்டு விதை  நேர்த்தி செய்யவும்.
 
              - ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின்  அறுவடை செய்த  தாவரக்குப்பைகளை அகற்றி  தீயிடவும்.
 
              - பொட்டாசியம் உரத்தின் அளவை  அதிகரிக்கவும்.
 
              - அதிகப்படியான தொழுவுரம் 100 டன்  /  எக்டர் இடவும்.
 
              - 0.05  % பெனோமைல் (அ) 0.1 % கார்பென்டசிம் கொண்டு  செடிகளின் தூர்களில்  ஊற்றி மண்ணை  நனைக்கவும்.
 
              | 
            
                 
              
                
                   
  | 
                   
  | 
                 
                
                  | தண்டின் அடிப்பகுதியில்  பழுப்பு  நிறக்கோடுகள்  | 
                  மஞ்சள்  நிற  இலைகள்  | 
                 
              |